ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2025-ஆம் நிதியாண்டில் 145 அலுவலகங்களில் உள்ள 15,529 ஊழியர்களின் நலனுக்காக ரூ.13.10 கோடி செலவிடுவதாக அறிவித்துள்ளது, இதில் ஹாலிடே ஹோம்களுக்கு ரூ.74.37 லட்சம் அடங்கும். EPFO சுற்றறிக்கையின்படி, மரணத்திற்கான நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக ரூ.94.25 லட்சமும் அதேசமயம் இதர செயல்பாடுகளுக்கு நிதியாக 1.88 கோடியும் அடங்கும். 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்காக மருத்துவப் பரிசோதனைக்காக ரூ.3.97 கோடியும், 40 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு ரூ.1.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் EPFO அமைப்பு ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது. இதன் கீழ் ஒரு தனி நபர் தற்போதய வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது, அவர்களின் பழைய வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் தானாகவே புதிய கம்பெனிக்கு மாற்றப்படும்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, EPFO உறுப்பினர்கள் PF கணக்கிலிருந்து 50,000 ரூபாய்க்கு பதிலாக ரூ.1 லட்சம் ரூபாய் எடுக்கலாம். அதில் அரசாங்கம் இப்போது விதிமுறைகளை தளர்த்தியுள்ளது மற்றும் PF கணக்குகளில் இருந்து ஒரு முறை பணம் எடுக்கும் வரம்பை உயர்த்தியுள்ளது.
திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற செலவுகளைச் சமாளிக்க மக்கள் பெரும்பாலும் தங்கள் EPFO சேமிப்பை நம்பியுள்ளனர். இதற்காக தான் ஒரே நேரத்தில் பணம் எடுக்கும் வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளோம்" என்று மாண்டவியா கூறியுள்ளார்.
EPFO செயல்பாடுகளை மேம்படுத்தவும், உறுப்பினர்களுக்கான சவால்களைக் குறைப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் இந்த வாரம் கூறினார். EPFO இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 19.29 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்தது. இது கடந்த ஆண்டின் இதே ஜூன் மாதத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை விட 7.86 சதவீதம் அதிகமாகும்.
EPFO அமைப்பின் PF தொகையானது 10 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குகிறது மற்றும் பல தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சேமிப்புக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. EPFO சேமிப்பின் வட்டி விகிதம், 2024-ஆம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், EPFO-வின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் 78 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடையும் ஓய்வூதிய கொடுப்பனவு முறைக்கு (CPPS) ஒப்புதல் வழங்கப்பட்டது. EPS ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 1, 2025 முதல் இந்தியாவில் எந்த வங்கியிலும், எந்த கிளையிலும், எங்கு வேண்டுமானாலும் ஓய்வூதியத்தைப் பெறலாம். அடுத்த கட்டமாக, ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு (ABPS) அரசாங்கம் மாற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications