புதிய வீடு வாங்குவோருக்கு செம குட் நியூஸ்.. PF கணக்கில் இருந்து 90% பணத்தை இனி எளிதாக பெறலாம்..!!

பிஎஃப் என்பது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இது மாத சம்பளதாரர்களுக்கான ஒரு சேமிப்பு திட்டம். அரசு வழிகாட்டும் Employees' Provident Fund Organisation (EPFO) மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. ஒரு சம்பளதாரர் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அவரது மாத சம்பளத்தில் இருந்து ஒரு சதவீத தொகை பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதே அளவிற்கு நிறுவனமும் கூடுதல் பங்களிப்பை செலுத்துகிறது.

PF கணக்கில் பணம் சேர்த்து வருவது என்பது, ஓய்வுக்குப் பின் பெரும் உதவியாக இருக்கும். பிஎஃப்-க்கு செலுத்தும் பணத்தில் வரிவிலக்கும் கிடைக்கிறது. பொதுவாக PF-க்கு அரசு வழங்கும் வட்டி விகிதம் வங்கிக் கணக்குகளை விட அதிகமானதாக இருக்கும். எனவே, இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தை விட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு சென்றாலும், பிஎஃப் கணக்கை மாற்றம் செய்து தொடரலாம்.

புதிய வீடு வாங்குவோருக்கு செம குட் நியூஸ்.. PF கணக்கில் இருந்து 90% பணத்தை இனி எளிதாக பெறலாம்..!!

இந்நிலையில், வீடு வாங்குவது என்பது பலருக்கும் வாழ்க்கையின் ஒரு முக்கிய கனவாக இருக்கிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வங்கி கடன் வாங்குவதன் மூலம் இந்த கனவை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், கடன் பாரமின்றி வீடு வாங்க விரும்புவோருக்கு Provident Fund (PF) கணக்கில் சேர்த்திருக்கும் தொகையை பயன்படுத்தும் வழி மற்றொரு தேர்வாக இருக்கிறது.

அதாவது, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (EPFO) ஒரு முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, வீடு வாங்க, கட்ட அல்லது வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ. செலுத்த, உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் தொகையில் 90% வரை பணத்தை எளிதாக திரும்பப் பெற முடியும். மேலும், இதற்கான தகுதி காலம் 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஃப் கணக்கு திறந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, உறுப்பினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒரே முறை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI மற்றும் ATM மூலம் உடனடி பணம் பெறும் வசதி: 2025 ஜூன் மாதத்தில் இருந்து உறுப்பினர்கள் அவசர தேவைக்காக ரூ.1 லட்சம் வரை PF தொகையை உடனடியாக எடுக்க முடியும். இந்த வசதி UPI மற்றும் ATM வழியாக வழங்கப்படும். முன்னதாக கிளெயிம்கள் ரூ.1 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி, திருமணம், மருத்துவ செலவுகள் போன்ற காரணங்களுக்காக பிஎஃப் பணம் பெறும் செயல்முறைகளும் இனி சிக்கலின்றி நடைபெறும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பளதாரர்களுக்கு தேவையான சமயத்தில் நிதி வசதி அதிகரிக்கும்.

மத்திய அரசு பிஎஃப் கணக்கில் இருந்து வீட்டு தேவைகளுக்காக முன்பணம் பெறும் நடைமுறையை சீரமைத்துள்ளது. இது சம்பளதாரர்களுக்கு ஒரு நிதி நிவாரணமாக இருக்கலாம். இருப்பினும், இது ஒரு பொறுப்புள்ள முடிவாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் அபிஷேக் ராஜ் மற்றும் பவன் சர்மா கூறுகையில், "ஓய்வுக்கால சேமிப்பு என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் நம்பிக்கையின் அடையாளம் ஆகும். இந்த நிதியில் இருந்து அதிக அளவில் பணம் எடுத்து வைப்பது, எதிர்கால நிதி சுதந்திரத்தைக் குறைக்கும் அபாயம் உண்டு" என்று தெரிவித்துள்ளனர்.

வீடு வாங்குவது போன்ற வாழ்நிலை மேம்பாட்டு தீர்மானங்களில் பிஎஃப் பணத்தை பயன்படுத்தலாம். எந்த ஒரு பெரிய நிதி முடிவையும் எடுப்பதற்கு முன், ஒரு தகுதி பெற்ற நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும். அதிகப் பணம் எடுப்பது உடனடி நன்மையை வழங்கலாம். ஆனால், ஓய்வுக்கால தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால், நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அரசு வழங்கும் புதிய சலுகைகள் நன்மை அளிக்கக் கூடியவையாக இருந்தாலும், அதனை திட்டமிட்டு பயன்படுத்தும் நபர்களுக்கே உண்மையான பயன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+