ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தங்களுடைய உறுப்பினர்களுக்காக அசத்தலான அம்சத்தை கொண்டு வரவுள்ளது. PF உறுப்பினர்கள் தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளவும், எளிதாக சேவை பெறவும் ஒரு புதிய வாட்ஸ்அப் சாட்பாட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் PF உறுப்பினர்கள் சில சேவைகளை ஒரு சில கிளிக்கங்களில் பெற முடியும்.
இது நாள் வரையில் பிஎஃப் உறுப்பினர்களின் பிரச்சினைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, அதற்கு ஒரு தீர்வுக் காண வேண்டும் என்பதற்காகவே எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பேலன்ஸ் சரி பார்ப்பது முதல் பணம் எடுப்பது வரை பிஎஃப் உறுப்பினர்களின் பிரச்சினைகள் ஏராளம்.
ஆனால் இனிமேல் கவலைப்படத் தேவையில்லை. பிஎஃப் உறுப்பினர்களுக்கு சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டதும் ஒரு சில நிமிடங்களில் யார் உதவியையும் அணுகாமல் நீங்களே உங்கள் பேலன்ஸ்சை பார்த்துக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் சேவை: சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஈபிஎஃப்ஓ இணையதளத்தின் அதிகாரப்பூர்வ வாட்சப் நம்பருக்கு "ஹலோ" என்று ஒரு மெசேஜ் செய்தால் போதும். பின்னர் சாட்பாட் தானாகவே உங்களிடம் பேசத் தொடங்கிவிடும். இந்த சேவையின் மூலம் நீங்கள் உங்கள் பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது?, நீங்கள் அக்கவுண்டில் கடைசியாக செய்த 5 பரிவர்த்தனை விபரங்கள், ஒரு வேளை PF பணத்தை திரும்பப் பெற கிளைம் கோரிக்கை சமர்ப்பித்திருந்தால், அந்தக் கோரிக்கை நிலுவையில் உள்ளதா என்ற ஸ்டேட்டஸ் விபரங்கள் மற்றும் PF தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும்.
மோசடி சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகவும், உறுப்பினர்கள் தவறான வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஈபிஎஃப்ஓ இணையதளத்தின் அதிகாரப்பூர்வ வாட்சப் நம்பரில் கிரீன் டிக் இருக்கும். இதன் மூலம் போலி நம்பரிலிருந்து மெசேஜ் வருகிறதா? என்பதை மக்கள் எளிதாகக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
மொழி பிரச்சனையைப் பற்றி பயப்படத் தேவையில்லை. தமிழ் உள்ளிட்ட பிற உள்ளூர் மொழிகளிலும் சேவை கிடைக்கும். எனவே கிராமப்புறங்களில் இருக்கும் உறுப்பினர்களும் தங்களுடைய சேவையை தாங்களே செய்து கொள்ளலாம். இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்ன தெரியுமா? சாட் பாட் என்பதால் முற்றிலுமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இயங்குகிறது, அரசு அலுவலக நேரங்களைப் போலல்லாமல் வாரத்தில் 7 நாட்களும், ஏன் 24 மணி நேரமும் நீங்கள் சேவை பெறலாம்.
பிஎஃப் பணம் எடுப்பதில் பிரச்சினை, ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள், பேங்க் அக்கவுண்ட் புதுப்பிப்பு, ஆதார் இணைப்பு போன்ற பல விஷயங்களுக்கு 24 மணி நேரமும் உடனுக்குடன் இந்த சாட் பாட்டு வழிகாட்டும் . கூடுதலாக EPFO அமைப்பும் சில விஷயங்களைச் செய்யவுள்ளது. உறுப்பினர்களுக்கு சில ரிமைண்டர்களும் வாட்சப் வழியாக இபிஎஃப்ஓ இணையதளம் அனுப்ப இருக்கிறது. ஒருவேளை நீங்கள் பேங்க் அக்கவுண்ட் புதுப்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது கேஒய்சி செயல்முறையையும் முடிக்க வேண்டும் என்பதற்கான முக்கியமான ரிமைண்டர் உங்களுக்கு அனுப்பப்படும். அதேபோல முக்கிய தகவல்களும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு நோட்டிபிகேஷனாகவே வந்துவிடும்.


Click it and Unblock the Notifications