இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ அமைப்பு முக்கியமான ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கான சேவைகள் அனைத்தும் ஒரு கிளிக்கிலேயே கிடைக்க போகிறது.
தற்போது பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இலவச எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் அல்லது பிஎஃப் தளத்தில் அல்லது செயலியில் லாகின் செய்து பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டு இருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இனி வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் சொன்னாலே போதும் உங்களுடைய பிஎஃப் தொடர்பான அனைத்து தகவல்களும் whatsapp வாயிலாகவே உங்களை வந்து சேரும்.

இதற்காக ஈபிஎஃப்ஓ அமைப்பு whatsapp உடன் இணைந்து பிஎஃப் சந்தாதாரர்களுக்கு whatsapp வாயிலாகவே பிஎஃப் -இன் பெரும்பாலான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது. எனவே வாட்ஸ் அப் வாயிலாகவே பிஎஃப் பேலன்ஸ் , கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் கிளைம் ஸ்டேடஸ் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பிஎஃப் கணக்கோடு ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறதா கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது என்பன உள்ளிட்ட தகவல்களை கூட பிஎஃப் சந்தாதாரர்கள் whatsapp வாயிலாகவே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முதலில் பிஎஃப் சந்தாதாரர்கள் இந்த கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணில் வாட்ஸ் அப் சேவை பயன்படுத்த வேண்டும். அதில் ஈபிஎஃப்ஓ அமைப்பு வெளியிடக்கூடிய எண்ணுக்கு ஹலோ என மெசேஜ் அனுப்ப வேண்டும். இதனை அடுத்து பிஎஃப் பேலன்ஸ் ,கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் , க்ளைம் ஸ்டேட்டஸ் என வரிசையாக ஒரு மெனு ஆப்ஷனில் காட்டும். அதில் உங்களுக்கு எந்த தகவல் வேண்டுமோ அதனை கிளிக் செய்தால் போதும் ஈபிஎஃப்ஓ அமைப்பு அந்த தகவல்களை வாட்ஸ் அப்பில் உங்களுக்கு தெரியப்படுத்தி விடும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ் என உள்ளூர் மொழிகளிலேயே பிஎஃப் தொடர்பான தகவல்கள் வாட்ஸ் அப் வாயிலாக வழங்க தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிஎஃப் சேவைகளை பெறக்கூடிய வசதி கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். தற்போது பெரும்பாலான மக்கள் whatsapp சேவைகளை பயன்படுத்துகிறார்கள். பல்வேறு அரசு சேவைகளும் வாட்ஸ் அப் வாயிலாகவே கிடைக்கின்றன. ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் தொடங்கி நம்முடைய வங்கி சேவைகள் மற்றும் அரசாங்க சான்றிதழ்கள் பெற்று பதிவிறக்கம் செய்வது வரை வாட்ஸ் அப் வாயிலாகவே பல்வேறு தகவல்களையும் பெற முடிகிறது. எனவே ஈபிஎப்ஓ அமைப்பும் அத்தகைய சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த வாட்ஸ் அப் சேவைகளை கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications

