இதைவிட பெரிய உதவி இருக்காது! EPFO கொண்டு வந்த மிகப்பெரிய மாற்றம்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

சென்னை: EPFO அமைப்பில், கணக்கு வைத்து இருக்கும் உறுப்பினர்களுக்கு முக்கிய நல்ல செய்தி ஒன்றை EPFO வழங்கி உள்ளது.

ஊழியர்களுக்கு வயதான காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு இதனை நிர்வகிக்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) தற்போது, அதன் உறுப்பினர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, EPFO அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால், அவர்களின் இபிஎஃப் (EPF) தொகை தானாகவே பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றியமைக்கப்படும். இதற்காக அந்த உறுப்பினர்கள், விண்ணப்ப படிவம் 31 போன்ற படிவங்களை பயன்படுத்த வேண்டிய எந்த வித அவசியமும் இருக்காது.

இதைவிட பெரிய உதவி இருக்காது! EPFO கொண்டு வந்த மிகப்பெரிய மாற்றம்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

பணியாளர் ஒருவர் தனது பழைய நிறுவனத்திலிருந்து, புதிய நிறுவனத்திற்கு மாறும்போது அவரின் UAN நம்பர், புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். அதற்காக ஆன்லைனில் இபிஎஃப்ஓ இணையதளத்திற்கு சென்று பழைய PF அக்கவுண்ட்களை சரிபார்த்து, புதிய PF அக்கவுண்டோடு இணைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பல இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். மேலும் அந்தப் பிரச்சினைகளை சரி செய்யும் நோக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க இபிஎஃப்ஓ அமைப்பு முடிவு செய்து இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

UAN வைத்திருக்க தேவை என்ன?: UAN என்று சொல்லப்படுகிற யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மாறுபடும். ஒவ்வொரு PF கணக்கிலும், வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து 12 சதவீதமும், அந்த ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும். இது பிற்காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் செலுத்தப்படும் ஒரு வகை முதலீடாகும். இந்த UAN நம்பரை பயன்படுத்தி, உங்கள் PF கணக்குகளில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும். இதன் மூலம் நீங்கள் PF பாஸ்புக்கை டவுன்லோட் செய்யலாம். மேலும் உங்களது பிஎஃப் கணக்கில் மொத்தமாக எவ்வளவு தொகை செலுத்தி உள்ளீர்கள் என்பதை பற்றிய தகவலை உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலமாக பெறலாம்.

PF என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான சிறப்பு சேமிப்பு திட்டம் போல் செயல்படுகிறது மாத சம்பளக்காரர்கள் தங்களின் சம்பளத்தில் 12 சதவீதமும் நிறுவனத்தின் மூலம் அதே 12 சதவீதமும் பங்களிக்க வேண்டும். இதில் நிறுவனத்தின் மூலம் போடப்படும் 12 சதவிகிதம் இரண்டு பங்குகளாக முதலீடு செய்யப்படுகிறது. 8.33 சதவீதம் இதனை ஓய்வூதிய திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்வார்கள். மீதமுள்ள 3.67 சதவீதத்தை ஊழியர்களின் EPF அக்கவுண்டில் டெபாசிட் செய்வார்கள். இந்த நிதிக்கான வட்டி விகிதம் EPFO அமைப்பின் மூலம், ஆண்டுதோறும் மாற்றம் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 2023 முதல் 2024 ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதம்.

மாதந்தோறும் EPF வட்டி விகிதம் கூட்டப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் அந்த ஊழியர்களின் கணக்கில் மார்ச் 31ஆம் தேதி வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊழியர்கள் நிறுவனம் மற்றும் தங்களின் சொந்த பங்களிப்பைக் கொண்டு மொத்த தொகையயைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+