பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது.
குறிப்பாக ஈபிஎஸ் எனப்படும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரக்கூடிய நபர்கள் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிஎஃப் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் பெயரில் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.

பிஎப் கணக்கு வைத்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வேலை செய்து அதில் பங்களிப்பு செய்த ஊழியர்கள் இந்த பென்சன் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் கணக்கில் பங்களிப்பு செய்யும் தொகையில் ஒரு கணிசமான பணமானது பென்ஷன் திட்டத்திற்கு சென்று விடும். இவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணத்தை மாதாந்திர ஓய்வூதிய தொகையாக பெறலாம். இதனை ஈபிஎஸ் Employees' Pension Scheme (EPS), 1995 என அழைக்கிறார்கள்.
தற்போது இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக 1000 ரூபாய் இருக்கிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகை. ஆனால் தற்போது வாழ்க்கை செலவினங்கள் பல மடங்கு பெருகிவிட்டன. இத்தகைய சூழலில் வெறும் 1000 ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு ஓய்வூதியதாரரால் எப்படி குடும்பம் நடத்த முடியும் செலவுகளை போக்கிக் கொள்ள முடியும் என ஓய்வூதியதாரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசு ஈபிஎஸ் பென்ஷன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை 1000 ரூபாயிலிருந்து 5000 முதல் 10,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக 1000 ரூபாய் என்ற ஓய்வூதியத் தொகை மாறாமலேயே இருக்கிறது. பல்வேறு ஓய்வூதிய அமைப்புகளும் ஈபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய பலரும் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றன.
வரக்கூடிய பட்ஜெட்டில் மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை 5000 ரூபாயாகவும் அல்லது 10,000 ரூபாயாகவும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு ஓய்வூதிய தொகையை உயர்த்துவது அரசுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும். எனவே பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்து அரசு இந்த முடிவினை எடுக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications