சென்னை: வங்கிக் கணக்கு கூட இல்லாதவர்களுக்கு கடன் சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஈக்விடாஸ் ஸ்மால் பேங்க் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இதன் மேலாண் இயக்குநர் வாசுதேவன் தான் இந்த வெற்றிக்கு முழு காரணமாக இருப்பவர்.
வாசுதேவன் பத்தாங்கி நரசிம்மன், முருகப்பா நிறுவனத்தின் வாகன கடன் பிரிவு துறையில் பணியாற்றி வந்தவர். அப்போது குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள், வங்கி கணக்கே கூட இல்லாதவர்களுக்கும், குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கும் கடன் வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று யோசனை தோன்றியது.

இதற்காக 14 ஆண்டு காலம் முருகப்பா குழுமத்தில் பணியாற்றி வந்த அவர் அந்த வேலையை விடுத்தார். இதனை அடுத்து மும்பைக்கு சென்று அவர் டெவலப்மென்ட் கிரெடிட் பேங்கில் பணியாற்ற தொடங்கினார்.
திடீரென தன்னுடைய மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் மும்பையில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. தன்னுடைய 45ஆவது வயதில் சென்னை திரும்பிய அவர், புதிதாக வேலை தேட தொடங்கினார். அப்பொழுது தான் அவருக்கு பங்களாதேஷில் செயல்பட்டு வந்த கிராமின் மாடல் குறித்து தெரிய வந்தது.
அதாவது குறைந்த வட்டிக்கு சிறிய தொகையிலான கடன்களை வழங்குவது. இந்த மாடலை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய சென்னையில் இருந்த வீட்டை அடமானம் வைத்து அந்த தொகையில் ஒரு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் ஈக்விடாஸ் நிதி நிறுவனம் தொடங்கிய கதை.
வாசுதேவன் அவர்களின் ஐடியா மிக எளிமையானது அதாவது 5000 ரூபாய் கடன் வழங்கி ஒரு வாரத்தில் அதனை வசூலிப்பது. சிறு வியாபாரிகள் தொடங்கி பலரும் இவரிடம் கடன் பெற தொடங்கினர். அப்போது இவருக்கென அலுவலகம் கிடையாது. தன்னுடைய காரையே அலுவலகமாக செயல்படுத்தினார். ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட 600 பேர் அவரிடம் இதுபோல குறைந்த அளவிலான கடன்களை பெற்றனர். இதற்கு 25 சதவீதம் வட்டி என அவர் வசூலித்தார்.
மூன்று மாதங்களிலேயே ஈக்விடாஸ் நிறுவனம் 16 கோடி ரூபாய் கடன்களை வழங்கி இருந்தது. 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்தது.அந்த சமயத்தில் மிகச்சிறந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற பெயரையும் இந்த நிறுவனம் பெற்றது.
2010 ஆம் ஆண்டு ஆந்திராவில் கடன்களை செலுத்த முடியாமல் ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. அப்போது 610 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறி இருந்த ஈக்விடாஸ் தன்னுடைய பாதையை மாற்ற வேண்டி இருந்தது .
2011 ஆம் ஆண்டு ஈக்விடாஸ் நிறுவனம் வாகன கடன்களை வழங்கத் தொடங்கியது.இவர் வங்கியில் கடன் பெற்றவர்களில் 95% பேர் அதுவரை வங்கிகளுக்கு செல்லாதவர்களாக இருந்தனர். 2012 ஆம் ஆண்டில் ஈக்விடாஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 1000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாறியது.
2016 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஸ்மால் பைனான்ஸ் வங்கியாக செயல்படுவதற்கு ஆர்பிஐயின் அனுமதியை பெற்றது. இதனை அடுத்து ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி என்ற பெயரில் செயல்பட தொடங்கி, வேளாண் கடன் , தங்க கடன் மற்றும் சிறு தொழில்களுக்கான கடன்களை வழங்கக்கூடிய நிறுவனமாக இது உருவெடுத்தது. 2016 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்தது.
2017 ஆம் ஆண்டில் ஈக்விடாஸ் நிறுவனம் ஷெட்யூல் கமர்ஷியல் பேங்க் என்ற அந்தஸ்தை பெற்றது. தற்போது 40 லட்சம் வாடிக்கையாளர்களோடு 860 கிளைகளுடன் இந்தியாவின் 17 மாநிலங்களில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications