அமெரிக்கா நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீவன் மேன்கிங். இவர், முன்னாள் வால் ஸ்ட்ரீட் இக்குவிட்டி வர்த்தகர் (Equities Trader) ஆவர். இவர் தற்போது வீட்டில் இருந்து டியூஷன் எடுத்து ஒரு மணி நேரத்திற்கு $1,000 (சுமார் ரூ.86,800) வரை சம்பாதித்து வருகிறார். வணிகத் துறையில் லட்சத்தில் சம்பளம் பெற்றிருந்தவர், தொடர்ச்சியான மன அழுத்தம், அதிக வேலை நேரம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு வேலையை விட்டு நின்றுவிட்டார். பின்னர், அவருக்கு பிடித்த கல்வித்துறைக்கு திரும்பினார். இதன் தொடர்ச்சியாக அவர், டியூஷன் எடுத்து வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.
"வணிகத் துறையின் பதட்டமும், நீண்ட நேர வேலைகளும் என் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் சிரமப்படுத்தியது. கல்வி எனக்கு பிடித்த துறையாக இருந்ததால், என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன்" என்று அவர் CNBC Make It-இன் நேர்காணலில் ஸ்டீவன் மேன்கிங் கூறியுள்ளார். ஸ்டீவன் மேன்கிங், தனது முந்தைய பணி அழுத்தத்தில் இருந்து விலகி, இப்போது வாரத்திற்கு 20 முதல் 25 மணி நேரம் மாணவர்களுக்கும், இளம் தொழில்முனைவோர்களுக்கும் கல்வி மற்றும் தொழில் நோக்கங்கள் குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.

எந்தக் கேள்விக்கும் விடையளிக்கும்போது, ஸ்டீவன் மேன்கிங் ஒரு முக்கியமான வாழ்வியல் அறிவுறுத்தலை கொடுத்துள்ளார். அதாவது, உங்கள் தொழில் முடிவுகள் குறித்து, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நீங்கள் வாழ வேண்டிய அவசியமில்லை என்று அறிவுறுத்தியுள்ளார். ஒரு விஷயத்தை செய்யும் முன், அதுகுறித்து முழுமையாக ஆராய்ச்சி (Due Diligence) செய்ய வேண்டும். உங்கள் உண்மையான மதிப்பை (True Worth) உணர வேண்டும். சமூக எதிர்பார்ப்புகளைத் (External Expectations) தூக்கி எரிந்து, தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீவன் மேன்கிங் தெரிவித்துள்ளார்.
"நான் 'finance guy' என்பதில் இருந்து வெளியேறி, உண்மையில் என்னை திருப்திப்படுத்தும் வேலையாக கல்வித்துறையில் சென்று சேர்ந்துள்ளேன். இது எனக்கான உண்மையான தன்னிறைவு" என்று ஸ்டீவன் மேன்கிங் கூறியுள்ளார். பிறர் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட,
நீங்கள் உங்களது உள் அழைப்புக்கு (Inner Calling) செவிசாய்க்க வேண்டும்.
அது தான் நீண்ட நாள் தன்னிறைவு, நம்பிக்கை மற்றும் வெற்றிக்கு வழிகாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேறுபட்ட பாதைகளை ஆராய தயாராக இருக்க வேண்டும் என்ற தீவிரமான உறுதியை நான் எடுத்துக்கொண்டேன். பிறர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் அதிக கவலைப்படாமல் இருப்பது முக்கியம். உதாரணத்திற்கு, 'நான் ஒரு பைனான்ஸ் கையான். எனவே மீண்டும் பைனான்ஸ் தொடர்பான வேலை தேட வேண்டும்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டியிருந்தது. இல்லை என்றால், என் குடும்பம், நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்பது மனதை பதட்டப்படுத்தியது.
ஆனால், அந்த தீவிரமான தீர்மானம், புதிய பாதைகளை துணிந்து முயற்சிக்க செய்தது. பழமையான அடையாளங்களை (old labels) விலக்கி, சுயமாக கட்டியெடுத்த தனி அடையாளம் மற்றும் தொழில்முறை வெற்றியை ஏற்படுத்தியது. திறமையை விட தைரியம் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். வேலை ஒரு அடையாளம் அல்ல.. அது ஒரு பயணம். உங்கள் சுய உணர்வுக்கு நேர்மையான பாதையை தேர்ந்தெடுங்கள்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications