ஸ்வீடன் டெலிகாம் நிறுவனமான எரிக்சன், AI மற்றும் 6Gயில் கவனம் செலுத்தி வலுவான திட்டத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் இந்தியாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) தளத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகி ஆண்ட்ரெஸ் வின்சென்ட் புதன்கிழமை இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இல் இந்தத் தகவலைத் தெரிவித்தார். எரிக்சன் இந்தியாவில் AI, General AI மற்றும் Network API களில் வேலைகளை துரிதப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து வின்சென்ட் மேலும் கூறுகையில், எரிக்சனுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும். இதுவரை இந்தியாவில் நாங்கள் சாதித்ததை நினைத்து பெருமை கொள்கிறோம் என்றும், 1994 முதல் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறோம். உயர்-செயல்திறனுடன் நிரல்படுத்தக்கூடிய நெட்வொர்க்குகள் மற்றும் நெட்வொர்க் ஏபிஐகள் மற்றும் செயலில் உள்ள டெவலப்பர் மற்றும் ஸ்டார்ட்அப் ஆகியவற்றின் கலவையானது இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

மேலும், நாங்கள் 6ஜி, நெட்வொர்க் ஏபிஐகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்வோம் என்றும், இது மோசடி கண்டறிதல், சாதன மேலாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற மேம்பட்ட பயன்பாட்டு நிகழ்வுகளை இயக்குவதற்கு R&D குழுக்கள் நிரல்படுத்தக்கூடிய/API திறன்களில் கவனம் செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.
எரிக்சன் தற்போது சென்னை, பெங்களூரு மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் R&D தளங்களைக் கொண்டுள்ளது. இது தொலைத்தொடர்புத் துறையில் ஈடுபட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூறிய வின்சென்ட் 22 மாதங்களில் ஏறக்குறைய அரை மில்லியன் அடிப்படை நிலையங்களை நிறுவுவதன் மூலம் இந்தியா 90 சதவீதத்திற்கும் அதிகமான கவரேஜை வழங்கியுள்ளது என்றும், நாட்டின் நெட்வொர்க் செயல்திறனை 16 இலிருந்து 86 ஆகக் கொண்டு சென்றது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, எரிக்சன், பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் தங்கள் 5G வெளியீட்டிற்காக கூட்டாண்மைகளை அறிவித்தது. இந்த நிலையில், வோடபோன் ஐடியா (Vi) ஸ்வேதிஷ் நிறுவனமான எரிக்சனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், 4G மற்றும் 5G RAN (ரேடியோ அணுகல் நெட்வொர்க்) ஒப்பந்தத்தை அறிவித்தது. அதன் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் 4G நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் 5G வெளியீடுக்கான உபகரணங்களை வாங்கப் போகிறது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், எரிக்சன் வோடபோன் ஐடியாவிக்கு 4G மற்றும் 5G 10 அடிப்படை நிலையங்களை வழங்கும். அந்த 10 சந்தைகளில் டெல்லி, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா, வடகிழக்கு, அசாம், கேரளா மற்றும் மத்திய பிரதேசம்-சத்தீஸ்கர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications