4 வருடத்தில் ரூ.30 கோடி பிஸ்னஸ்.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல வர்த்தகத் துறைகள் இருந்தாலும், ஒரு சில துறையில் மட்டுமே புதிதாக வருபவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும்.

 

அப்படி ஒரு துறை தான் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் துறை, இத்துறையில் பெரு நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டில் பிரபலமான நிறுவனங்கள் மட்டுமே தான் எளிதில் வெற்றி பெற முடியும்.

இத்தகைய போட்டி மிகுந்த துறையில் தமிழ்நாட்டில் ஈரோட்டை சேர்ந்த ஆர்த்தி ரகுராம் என்பவர் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார். யார் இவர்..? என்ன செய்கிறார்..? எப்படி 30 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை உருவாக்க முடிந்தது..?

கழுதை பால் விற்பனையில் கல்லா கட்டும் ஸ்ரீநிவாஸ்.. லாபம் எவ்வளவு தெரியுமா..?! கழுதை பால் விற்பனையில் கல்லா கட்டும் ஸ்ரீநிவாஸ்.. லாபம் எவ்வளவு தெரியுமா..?!

ஈரோடு

ஈரோடு

தமிழ்நாட்டில் முக்கியமான மாவட்டமாக விளங்கும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை உருவாக்கிய தேகா ஆர்கானிஸ் என்னும் ஸ்கின் கேர் மற்றும் பர்சனல் கேர் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

கோவை கல்லூரி

கோவை கல்லூரி

ஆர்த்தி ரகுராம்-ன் தந்தை ஆர்த்திக் கம்பிரசர் என்ற நிறுவனத்தை வைத்திருந்தார், இவர் சொந்தமாகக் கம்பிரசர் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆர்த்தி 12ஆம் வகுப்பு வரையில் திருப்பூரிலும், கல்லூரி படிப்பை கோவையிலும் முடித்தார். கோவையில் பிஎஸ்ஜி ஆர்ட்ஸ் கல்லூரியில் பிஏ எக்னாமிக்ஸ், ஜேசன்ஸ் ஸ்கூல் ஆ பிஸ்னஸ்-ல் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிஜி டிப்லோமா முடித்தார்.

ஸ்கின்கேர் ஐடியா
 

ஸ்கின்கேர் ஐடியா

வீட்டில் தயாரிக்கும் ஸ்கின்கேர் ஐடியா மீது ஆர்வம் அதிகரித்த பின்பு பல காஸ்மெட்டிக்ஸ் வொர்க்ஷாப்-ல் பங்கேற்றார், அப்படி ஒரு வொர்க்ஷாப் தான் ஆர்த்தியின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம். 2017ல் அவர் சோப் செய்யும் வொர்க் ஷாப்-ல் கலந்துகொண்டார்.

சார்கோல் சோப்

சார்கோல் சோப்

இதன் பின்பு ஆர்த்திச் சொந்த முயற்சியில் சார்கோல் சோப் தயாரித்தார், இதைத் தான் பயன்படுத்திப் பார்க்கும் போது ஸ்கின் க்ளோ ஆனது மட்டும் அல்லாமல் முகப்பரு குறையத் துவங்கியது. இதை நண்பர்கள், உறவினர்களிடம் பயன்படுத்த அளித்த போது நல்ல ரிசல்ட் வந்தாக இன்றும் பூரிப்புடன் ஆர்த்திக் கூறுகிறார்.

ஓரே நாளில் 11,050 ரூபாய்

ஓரே நாளில் 11,050 ரூபாய்

இதே சார்கோல் சோப் உடன் பிற, வீட்டில் செய்த ஆரஞ்சு தோல் சோப்பு, ரோஜா சோப்பு, மூலிகை சோப்களை ஈரோடு வேல்ஸ் அகடமி பள்ளியில் விற்பனை செய்த போது ஓரே நாளில் 11,050 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஆர்த்திக் கூறினார்.

உற்பத்தி தளம்

உற்பத்தி தளம்

இந்த வெற்றிக்கு பின்பு கட்டுமான துறையில் இருக்கும் ஆர்த்தி-யின் கணவர் ரகுராம் மற்றும் குடும்பங்களின் உதவியுடன் தேகா (தேகம்) ஆர்கானிஸ் என்ற பிராண்டை உருவாக்கி ஈரோட்டில் தனியாக உற்பத்தி தளத்தை அமைத்தார்.

தேகா காஸ்மெட்டிக்ஸ்

தேகா காஸ்மெட்டிக்ஸ்

தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் அதன் இணையத் தளத்திலும், சில முக்கியமான கடைகளில் மட்டுமே கிடைக்கும் வகையில் வர்த்தகச் சந்தையை உருவாக்கியுள்ளார் ஆர்த்தி ரகுராம்.

வர்த்தகம் வரிவாக்கம்

வர்த்தகம் வரிவாக்கம்

தற்போது தேகா காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் பிற ஈகாமர்ஸ் தளத்தில் இல்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ள ஆர்த்தி, மக்களின் பரிந்துரை மற்றும் வாய் மொழியாகவே வர்த்தகம் விரிவாக்கம் அடைந்து வருவதாகக் கூறுகிறார் ஆர்த்தி. மேலும் மொத்த வர்த்தகத்தில் 8-10 சதவீதம் வெளிநாட்டு வர்த்தகம் என்றும் பெருமையாகக் கூறுகிறார் ஆர்த்தி.

100 பொருட்கள்

100 பொருட்கள்

இன்று இவருடைய சார்கோல் சோப் மற்றும் பீட்ரூட் லிப் பாம் தான் அதிகம் விற்பனையாகும் பொருட்களாக உள்ளது. சோப், பேஸ் பேக், ஹேர் ஆயில், ஹேர் சீரம் எனப் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பிரிவில் சுமார் 100 பொருட்கள் உடன் 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருவதாக ஆர்த்திக் கூறுகிறார்.

முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..! முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Erode Girl bootstrapped her Deyga cosmetics brand into 30 crore business in very short time

Erode Girl bootstrapped her Deyga cosmetics brand into 30 crore business in very short time 'இந்த'த் துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X