பொதுவாக ஈரோடு மற்றும் அதை சுற்றியிருக்கும் அண்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையோடு தங்களுடைய ஷாப்பிங்கை முடிப்பதில்லை. ஏனெனில் தீபாவளிக்கு மறுநாள் வழங்கப்படும் தள்ளுபடிக்காக எப்போதுமே ஒரு கூட்டம் குவியும். அதேபோல இந்த முறையும் தீபாவளி முடிந்து உடனே நடைபெறும் சிறப்பு விற்பனையின் போது 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் துணிகளை வாங்குவதற்காக ஆர்கேபி சாலை மற்றும் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள கடைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
தமிழ்நாட்டின் மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு, ஆடைகளுக்காக நன்கு அறியப்பட்ட ஊராகும். இங்கு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடிக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதலே மக்கள் கடைகளின் முன் குவியத் தொடங்கினர். ஈரோட்டின் முக்கிய மார்க்கெட் பகுதியில் சுமார் 80 கடைகள் உள்ளன. ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 15,000-த்துக்கும் மேற்பட்டோர் தள்ளுபடி விலையில் துணிகளை வாங்க வெள்ளிக்கிழமை அன்று ஈரோட்டில் குவிந்தனர்.

மொத்தம் ரூ.10 கோடிக்கு விற்பனை: SVN Tex-இன் உரிமையாளரான SVN சங்கர் கூறுகையில், வெள்ளிக்கிழமை கடைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் செய்த மொத்த விற்பனை சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பரணி சில்க்ஸ்-இன் ஜெனரல் மேனேஜர் பி.சரவன்குமார் கூறுகையில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 30 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் இந்த விற்பனையைத் தொடங்கினோம். இப்போது எல்லா கடைகளும் இதைப் பின்பற்றுகின்றன. முதலில் சில வகை ஆடைகளுடன் இந்த விற்பனையைத் தொடங்கினோம். ஆனால் இப்போது அனைத்து வகையான ஆடைகளையும் விற்பனை செய்து வருகிறோம். இந்த சிறப்பு விற்பனை கடைகளின் தீபாவளி ஸ்டாக்கை கிளியர் செய்ய உதவும். அதே வேளையில், பெரும் தள்ளுபடியின் காரணமாக மக்களும் லாபம் அடைவார்கள்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கடையின் முன் மக்கள் அதிக அளவில் மக்கள் கூடியிருந்ததால் கடையைத் திறந்தோம். வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கெல்லாம் விற்பனையை முடித்துவிட்டோம். அதற்குள் பெரும்பாலான பொருட்கள் விற்றுத் தீர்ந்தன, என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதலே மக்கள் கடைகள் முன் குவியத் தொடங்கினர். சில கடைகள் சில மணிநேரங்களுக்கு மட்டும் தள்ளுபடி வழங்கின. மற்றவை நாள் முழுவதும் தள்ளுபடி வழங்கின. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கு 50% முதல் 80% வரை தள்ளுபடி இருந்தது.
இந்த விற்பனையின் முக்கிய நோக்கம் ஸ்டாக் கிளியரன்ஸ் ஆகும். கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கான புதிய தயாரிப்புகளை சேமித்து வைக்க வேண்டியிருப்பதால், இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கினோம் என்று சங்கர் கூறியுள்ளார்.
கொடுமுடியைச் சேர்ந்த எம்.ஜானகி என்ற வாடிக்கையாளர் கூறுகையில், "நாங்கள் எதையும் வாங்கத் திட்டமிடவில்லை. நாங்கள் டிசைன்களைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தோம், ஆனால் தள்ளுபடிகள் அதிகமாக இருந்ததால் ரூ.20,000-க்கு ஆடைகளை வாங்கினோம். தரமும் நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications