ஷாப்பிங் மால்கள் என்றாலே சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் தான் இருக்கும் என்ற நிலைமை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஷாப்பிங் மால்களை அமைப்பதற்கு முன் வருகின்றன.
மக்களிடையே ஏற்பட்டிருக்க கூடிய வாழ்க்கை முறை மாற்றம் இதற்கு ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான மாவட்டங்களில் ஒன்றாக திகழக்கூடிய ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் ஏக்கமாக இருந்த ஷாப்பிங் மால் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. ஈரோட்டில் மூன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான ஒரு ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருகிறது.

இதில் மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக ஹைப்பர் மார்க்கெட்டுகள் , உணவு உண்பதற்கு ஃபுட் கோர்ட்டுகள் மற்றும் திரைப்படங்களைக் கண்டு மகிழ்வதற்கு ஏற்ப 6 ஸ்கிரீன் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளிட்டவை அமைய இருக்கின்றன. இது ஈரோடு மக்களின் நீண்ட கால ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
ஈரோடு ஒரு டெக்ஸ்டைல் சந்தையாக இருக்கிறது. ஏராளமான மக்கள் வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்து இந்த தங்கி இருந்து ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஈரோட்டில் இருக்கும் மக்களுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதினை போக்க பாரம்பரியமான பூங்காக்கள் , கோயில்கள் இருந்தாலும் ஒரு ஷாப்பிங் மால் இல்லையே என வருத்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்காகவே ஃபார்ச்சூன் சிட்டியில் அவென்யூ ஷாப்பிங் மால் கட்டப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டெக்ஸ்வேலி கேம்பஸ் என்ற பெயரில் ஒரு நகரமும் அங்கே ஒரு மாலும் கட்டப்பட்டு வருகிறது. இங்கே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளின் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் , சினிமா தியேட்டர்கள் , குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன . துபாய் தலைமை இடமாகக் கொண்ட ஹைப்பர் மார்க்கெட் நிறுவனமான யாரா, இங்கே தன்னுடைய மிகப்பெரிய விற்பனை நிலையத்தை தொடங்குகிறது.
டெக்ஸ்வேலி நிறுவனத்தின் இயக்குனரான டிபி குமார் தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் நுகர்வோரின் இயக்கங்களை போக்கும் வகையில் முதல் கட்டமாக ஈரோட்டில் மிகப்பெரிய ஷாப்பிங் மாலை அமைத்திருப்பதாக தெரிவிக்கிறார். ஈரோடு மக்கள் ஷாப்பிங் மால்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கோயம்புத்தூருக்கு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என்று நிலை இருந்தது ஆனால் தற்போது மாறிவிட்டது.
இனி கோவை, திருப்பூர் மக்கள் எல்லாம் ஷாப்பிங் செய்வதற்கு ஈரோடுக்கு வருகை தர இருக்கிறார்கள். பல்வேறு நிறுவனங்களும் சென்னை, கோவை தாண்டி மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய நகரங்களை நோக்கி தங்களுடைய ஷாப்பிங் மால்களை அமைத்து வருகின்றன. அந்த வகையில் ஈரோடு தற்போது முக்கியமான ஒரு மையமாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications