ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான போர் பதற்றத்தையே உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலே சிக்கி தவிக்க கூடிய சூழல் உண்டாகி இருக்கிறது.
ஏராளமான இந்தியர்கள் தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக துபாய், சவுதி, குவைத் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்கிருந்து அங்கே செல்கின்றனர், அதே போல இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருகின்றனர். ஏராளமானவர்களுக்கு மற்ற நாடுகளுக்கான இணைப்பு விமானங்களும் இங்கே தான் இருக்கின்றன. ஆனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் வலுத்துள்ளதால் இந்த பிராந்தியத்தில் வான்வெளிகள் அடைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம் வரை வான்வெளி பரப்பு மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பிராந்தியத்தில் 900க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து மட்டும் இன்று 444 விமானங்கள் ரத்தாகி இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு ஆளாக இருக்கின்றனர். இந்த சூழலில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் பயணிகளின் பாதுகாப்பிற்கும் அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான பணிகளை கையில் எடுத்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறது.

அனைத்து விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்ந்து நிலைமையை கேட்டறிவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது. 10 மணி நேரத்திற்கு முன்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி பரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இன்றைய தினம் 444 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக ஆன்லைன் வாயிலாக தங்களுடைய விமான சேவை நிறுவனங்கள் வெளியிட்டிருக்க கூடிய தகவல்களையும் தங்கள் பயணிக்க வேண்டிய விமானத்தின் நிலையையும் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தூதரகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.

விமான சேவை நிறுவனங்களும் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவக்கூடிய போர் பதற்றத்தை கவனத்தில் கொண்டு பயணிகளின் பாதுகாப்பை கருதி மேலும் சில விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து லண்டன், மிலன் , கோபன்ஹேகன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இண்டிகோ தங்கள் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியை பயன்படுத்த கூடிய அனைத்து விமான சேவைகளையும் மார்ச் இரண்டாம் தேதி வரை ரத்து செய்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. விமானம் ரத்தானதால் டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் அவர்கள் மாற்று தேதியில் தங்களுடைய டிக்கெட்டை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் விமான நிலையங்களில் சிக்கி தவிப்போருக்கான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த சூழலில் குவைத், பஹ்ரைன், துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கக்கூடிய தங்களுடைய உறவினர்கள் குறித்து தாயகத்தில் உள்ள உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மத்திய அரசு அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பை கருதி பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தி இருக்கிறது, முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் கூறியுள்ளது. எனவே இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் கொள்ளாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பானது. அதே போல இந்திய தூதரகம் வெளியிடக்கூடிய தகவல்களை தொடர்ந்து பின் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
ஈரான், இஸ்ரேல் நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் மற்ற விமான நிலையங்களில் சிக்கி இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவம் அமெரிக்க படை தளம், அமெரிக்க கட்டடங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்துவதால் இந்தியர்களுக்கு பெரிய பிரச்சினை இருக்காது. எனினும் வீட்டிலேயே இருப்பது தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது கூடுதல் பாதுகாப்பை தரும்.
முன்னதாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்களோடு நிலைமை கண்காணித்து வருவதாக தெரிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்களுக்கு அவசர உதவி தேவைப்படும் போதும், புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 , 92895 16712 மற்றும் அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள் இந்தியாவிற்குள் - 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

புது வருடத்தில் ஈரானை திட்டமிட்டு தாக்கும் இஸ்ரேல்.. பெரும் சோகத்தில் ஈரான் மக்கள்..!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!



Click it and Unblock the Notifications