தீபாவளிக்கு முன்பு இப்படியொரு விஷயம் நடக்குதே.. ஈரானில் வெடித்த குண்டு சேலம், திருச்சி, கோவை வரையில் பாதிப்பு!

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் மக்கள் ஷாப்பிங் செய்வதற்காக தயாராகி வரும் நிலையில் ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் துறைக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஈரான் போர் மூலம் உருவாகியுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் உலகளாவிய ஆடை உற்பத்தி மற்றும் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்படத் தொடங்கியுள்ளது.

ஈரான் மற்றும் வளைகுடா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் வேளையில், இதற்கும் டெக்ஸ்டைல் துறைக்கும் என்ன தொடர்பு..? ஆடை தயாரிப்பில் அதிகமாகவும், முக்கியமாகவும் பயன்படுத்தப்படும் பாலியஸ்டர், பெட்ரோ கெமிக்கல் டை ஆகியவற்றின் விலை கச்சா எண்ணெய் மூலம் டெக்ஸ்டைல் துறைக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

தீபாவளிக்கு முன்பு இப்படியொரு விஷயம் நடக்குதே.. ஈரானில் வெடித்த குண்டு சேலம், திருச்சி, கோவை வரையில் பாதிப்பு!

பாலியஸ்டர் என்பது கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் ஒரு மதிப்பு கூட்டு பொருள் என்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் பாலியஸ்டர்-ஐ நேரடியாக பாதித்துள்ளது. இதுமட்டுமா பருத்தி விலையும் அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு எல் நினோ காரணத்தால் மழை பொழிவு மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பருத்தி உற்பத்தி குறைந்து, அதன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் ஆடை தயாரிப்பின் விலையை அதிகரித்துள்ளது, இதனால் திருப்பூர், சூரத் முதல் பங்களாதேஷ் வரையில் இருக்கும் அனைத்து ஆடை நிறுவனங்களும் விலையை உயர்த்தலாமா அல்லது லாப வரம்பை குறைத்துக்கொள்ளலாமா என்ற சிக்கலில் உள்ளன.

இது பெரும்பாலும் ஏற்றுமதி ஆர்டர்களை தான் பாதிக்கும் என்றாலும், தற்போது தீபாவளி பண்டிகை வரும் காரணத்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய நுகர்வு இருக்கும் என்பதால் ஈரான் போரின் தாக்கம் இந்தியாவில் ஆடைகளின் விலை உயர்வு இந்த தீபாவளிக்கு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஏற்றுமதி ஆர்டர்கள் பொதுவாக 1 வருடத்திற்கு முன்பே வைக்கப்படும் வேளையில் உலக நாடுகளில் இந்த விலை உயர்வின் தாக்கம் இலையுதிர் காலம் முதல் எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பணவீக்க உயர்வின் காரணமாக வர்த்தகம் குறைந்து வரும் வேளையில் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என டெக்ஸ்டைல் ஆலை உரிமையாளர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவில் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மளிகை பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துணி விலையும் அதிகரித்தால் மக்களின் பர்ஸில் பெரிய ஓட்டை விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தீபாவளி பண்டிகை துவங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ஆடி மாத பண்டிகை வரையில் அனைத்து பண்டிகை காலக்கட்டத்திலும் ஆடை விலை பெரிய அளவில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+