பெரிய நிறுவனத்தின் தலைவர் அல்லது தொழில்துறையில் பெரிய ஆளாக இருந்தாலும் சிலரை எல்லோருக்கும் தெரிந்து இருக்காது. அந்த மாதிரி ஒரு நபர் தான் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் தலைவர் நிகில் நந்தா.
ஆனால் அவரது மனைவி பெயரையோ அல்லது மாமனார் பெயரை சொன்னால் உங்களுக்கு டக்கென தெரியும். பாலிவுட் தம்பதிகளான அமிதாப் பச்சன் - ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் தான இவரது மனைவி.

1974 மார்ச் 18ல் ராஜன் நந்தா - ரிது நந்தா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் நிகில் நந்தா. இவருக்கு நடாஷா நந்தா என்ற ஒரு மூத்த சகோரியும் உள்ளார். நிகில் நந்தாவை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அவரது தாத்தா, அப்பா மற்றும் அம்மா ஆகியோரை பற்றி தெரிந்து கொள்ளுங்க.
வேளாண் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபலமான எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியது நிகில் நந்தாவின் தாத்தா ஹா் பிரசாத் நந்தா. 1948ல் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது மகனும், நிகில் நந்தாவின் தந்தையுமான ராஜன் நந்தா நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றார்.
பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனருமான ராஜ கபூரின் மகள் தான் நிகில் நந்தாவின் தாயார் ரிது நந்தா. இதனால் பாலிவுட்டில் புகழ்பெற்ற கபூர் குடும்பத்துடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சரி இப்ப நம்ம ஹீரோ நிகில் நந்தாவின் கதையை பார்ப்போம்.
இவர் டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் வணிக நிர்வாகம் படித்தார். நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் நிபுணத்துவம் பெற்றார். இது அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பெரிய அடித்தளமாக அமைந்தது. பின் குடும்ப வர்த்தகத்தில் கவனம் செலுத்தினார்.
1997 பிப்ரவரி 16ம் தேதியன்று ஸ்வேதா பச்சனை திருமணம் செய்தார். பாலிவுட்டின் லெஜண்ட் அமிதாப் பச்சனின் மகள் தான் ஸ்வேதா பச்சன். நிகில் நந்தா - ஸ்வேதா பச்சன் தம்பதியினருக்கு அகஸ்டியா நந்தா என்ற மகனும், நவ்யா நெவேலி நந்தா என்ற மகளும் உள்ளனர். 2018ல் தனது தந்தையிடம் இருந்து நிறுவன பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
எஸ்கார்ட்ஸ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.35,493.70 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 13,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நிகில் நந்தா பேட்டி ஒன்றில், நடிப்பு எனக்கானது அல்ல. பள்ளியில் படித்த காலத்தில் விடுமுறை நாட்களை தனது தாத்தா ராஜ் கபூருடன் செலவிட்டேன். அவருடன் சூட்டிங் நடக்கும் இடத்துக்கு செல்வேன். எனக்கு அப்போது 10-11 வயது இருக்கும், தாத்தா நடித்த சில ஹீரோயின்கள் மீது எனக்கு க்ரெஷ் இருந்தது.
ஆனால் சினிமா என்னை ஈர்க்கவில்லை. நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக மாடலிங் செய்தேன். ஆனால் அதை இப்போது திரும்பி பார்தால் எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. என்று தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications