இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், எஸ்சார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவருமான ஷஷிகாந்த் ரூயா தனது 81-வது வயதில் காலமானார். எஸ்சார் குழுமம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். 1969-ஆம் ஆண்டு ஷஷிகாந்த் ரூயா தனது சகோதரரான ரவி ரூயவுடன் இணைந்து எஸ்சார் குழுமத்தை நிறுவினார். இந்த நிறுவனம் ஒரு கட்டுமான நிறுவனமாக தொடங்கியது.
பிறகு கப்பல், துறைமுகம், கட்டுமானம், மின்சாரம், எண்ணெய் உற்பத்தி, ஆற்றல், ஸ்டீல் என பல்வேறு துறைகளிலும் தங்கள் தொழிலை விரிவடையச் செய்தது. இந்நிறுவனம் வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

எஸ்சார் நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் மெட்ராஸ் போர்ட் டிரஸ்டிடம் இருந்து 2.5 கோடி மதிப்பிலான ஆர்டர் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஆரம்ப ஆண்டுகளில் எஸ்சார் நிறுவனம் கட்டுமானம், பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. பாலங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது, மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை இந்நிறுவனம் கொண்டிருந்தது. 1980-களில் எண்ணற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துகளை கையகப்படுத்தி எரிசக்தி துறையிலும் எஸ்சார் நிறுவனம் நுழைந்தது. இது இந்நிறுவனம் வளர்ச்சி அடைய பெரிதும் உதவியது.
அதன் பிறகு 1990-களில் எஸ்சார் ஸ்டீல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது. ஸ்டீல் ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஹட்சிசனுடன் இணைந்து இந்தியாவில் 2-வது மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரை இந்நிறுவனம் நிறுவியது. அதன் பிறகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷ்யாவின் ரோஸ் நேப்ட் தலைமையிலான கூட்டமைப்புக்கு விற்பனை செய்தது.
ரூயாவுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் எஸ்சார் குழுமத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை தேர்ந்தெடுத்து வளர்ந்து வரும் வணிகத்திற்காக பங்களித்தார். கூட்டங்களில் பங்கேற்பது, விவரங்களை கேட்பது, புரிந்து கொள்வது என வணிகத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவியவர் ரூயா.
ஷஷிகாந்த் ரூயா பல தேசிய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களிலும் இருந்தவர். இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் உச்ச அமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு நிர்வாகக் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அவர் இந்து அமெரிக்கா கூட்டு வணிக கவுன்சிலின் தலைவராகவும், இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். பிரதமரின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திலும், இந்திய-ஜப்பான் வர்த்தக கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தவர் ஷஷிகாந்த் ரூயா. 2007 ஆம் ஆண்டில் உலக புகழ்பெற்ற நபர்களின் பட்டியலில் இவரும் இடம் பிடித்தார்.
ஷஷிகாந்த் ரூயாவின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய வயது 81. சமூக மேம்பாட்டிற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். பணிவு, அர்ப்பணிப்பு, அனைவரிடமும் தொடர்பு கொள்ளும் திறன் போன்ற விதிவிலக்கான விஷயங்களை கொண்டவர் இவர் என்று ஷாஷிகாந்த்-இன் சகோதரரான ரவி ரூயா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications