மும்பை: அமெரிக்க ஷார்ட் செல்லரான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் செபி தலைவர் மாதபி பூரி புச் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டதிலிருந்து, அவர் மீது கடுமையான விமர்சனங்களும், அவரின் செயல்பாடுகள் மீதும் அதிகப்படியான சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான Essel குரூப் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் சுபாஷ் சந்திரா திங்கட்கிழமை எப்போதும் இல்லாமல் அரிய வகையில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுபாஷ் சந்திரா தற்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புக் தனது குழுமத்திற்குத் தீங்கு விளைவித்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த சந்திப்பு தற்போது முதலீட்டுச் சந்தையிலும், இந்த கார்ப்ரேட் சந்தையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செபி அமைப்பின் தலைவராக இருந்துகொண்டு ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தவறுகளை மாதபி பூரி புச் செய்ததாகக் குற்றம் சாட்டினார் சுபாஷ் சந்திரா. இதோடு ஜீ-சோனி இணைப்பு ஒப்பந்தம் தோல்வியடைந்ததற்கும் அவரே காரணம் என்றும் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜீ-சோனி இணைப்பு ஒப்பந்தம் தோல்வி அடைந்தது மூலம் சில்லறை பங்குதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார் சுபாஷ் சந்திரா. மேலும் சுபாஷ் சந்திரா பேசுகையில் "எங்களையும், எங்கள் குழுமத்தையும் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்திய அதே கும்பலின் ஒரு பகுதியாக இருப்பவரின் பெயரை நான் இன்று சொல்கிறேன்... அந்த நபர் வேறு யாரும் அல்ல, செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச் தான்" என்று சுபாஷ் சந்திரா கூறினார்.
"ஜீ-சோனி ஒப்பந்தம் தோல்வியடைந்ததற்கு மாதபி புரி புச் தான் முக்கிய காரணம்" என்று சுபாஷ் சந்திரா கூறினார். இந்த இணைப்பு நடந்திருந்தால் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு என 90க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்ட மாபெரும் மீடியா நிறுவனத்தை உருவாக்கியிருக்கும். இது தற்போதைய ரிலையன்ஸ் டிஸ்னி கூட்டணிக்கு பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கும்.
"2019 ஜனவரியில் நான் வாங்கிய கடன்களில் சிலவற்றைத் திருப்பி செலுத்த முடியாமல் போனது உங்களுக்கு நினைவில் இருக்கும்... அப்போது நான் எங்கள் குழுமத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சிலர் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன்... அவர்களில் மாதபி பூரி புச்-ம் ஒருவர்" என்று சுபாஷ் சந்திரா கூறினார்.
சுபாஷ் சந்திரா, 2019 ஜனவரியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பேசுகையில், கடன் வழங்குபவர்களிடமிருந்து சில கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கூடுதல் நேரம் கேட்டபோது, புச் தனது கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்து தனது வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் தீங்கு விளைவிக்க வேண்டுமெனத் திட்டமிட்டதாக சுபாஷ் சந்திரா கூறினார்.
"நான் பணத்தை ஏற்பாடு செய்யும் வரை எனக்குச் சிறிது நேரம் கொடுக்க கடன் வழங்குபவர்களை வேண்டுகோள் விடுத்தேன்... புச் அவர்களிடம் எஸ்செல் குழுமத்திற்கு ஏன் நேரம் தருகிறீர்கள் என்று கேட்டார்... இதேபோல் நேரம் கொடுத்த இரண்டு கூட்டு நிதி நிறுவனங்களின் மீதும் (ICICI Prudential Mutual Fund மற்றும் HDFC Mutual Fund) அவர் அபராதம் விதித்தார்" என்று சுபாஷ் சந்திரா கூறினார்.
புச் மார்ச் 2022 இல் SEBI தலைவராகப் பொறுப்பேற்றார், அதற்கு முன்பு ஏப்ரல் 2017 முதல் செபி அமைப்பின் முழுநேர உறுப்பினராக பணியாற்றினார். யெசல் குரூப் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இரண்டு நிதி நிறுவனங்கள் மீது SEBI அபராதம் விதித்தது.
"செப்டம்பர் 2021 இல், நான் தியாகி ஜி (அப்போதைய SEBI தலைவர் அஜய் தியாகி) க்கு எழுதினேன்... புச் அப்போது என்னைக் குறிவைத்து, விரைவாகப் பதிலளிக்க வலியுறுத்தினார்... அப்போது அவர் ஊழல் செய்திருந்தது எனக்கு தெரியவில்லை. இதை கார்ப்ரேட் போட்டியாகத்தான் பார்த்தேன்" என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் சுபாஷ் சந்திரா கூறினார். அஜய் தியாகி மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2022 வரை SEBI தலைவராக பணியாற்றினார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications