இந்தியாவில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகவும் செயல்படுகிறது. எனவே உங்களுடைய ஆதார் கார்டில் உங்கள் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறிய பிறகு உங்களுடைய முகவரி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டில் சில மாற்றங்களை செய்வதற்கு குறிப்பிட்ட விதிகளை நிர்ணயித்துள்ளது. எனவே உங்களுடைய தகவல்களை எப்படி புதுப்பிப்பது? எத்தனை முறை புதுப்பிக்கலாம்? என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதாரில் உள்ள விவரங்களை மாற்றுவதற்கான வரம்புகள்:
பாலினம் மற்றும் பிறந்த தேதி: பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒருமுறை மட்டும்தான் மாற்ற முடியும். உங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த விவரங்களை புதுப்பிக்கலாம். இதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் மீண்டும் சரி செய்ய முடியாது.

பெயர் மாற்றங்கள்: உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் 2 முறை மாற்றிக் கொள்ளலாம். இது தவறுகளை திருத்துவதற்கு அல்லது திருமணமாகி ஒரு பெண் தங்கள் குடும்பப் பெயர்களை மாற்றுவதற்கு பயன்படுத்த உதவுகிறது.
முகவரி மாற்றங்கள்: முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களும் பிற வீடுகளுக்கு மாறும் பட்சத்தில் இந்த முகவரி விவரங்களை வீடு மாறும் போதெல்லாம் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வரம்புகள் எதுவும் கிடையாது.
ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: ஆதார் கார்டில் உங்கள் பெயரை மாற்றுவதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: அங்கு படிவத்தைப் பெற்று அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும். அதன் பிறகு ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை நிரப்பி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கவும்.
ஸ்டெப் 3: இந்த புதுப்பித்தலுக்கு 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். இதற்கு ட்ராக்கிங் நம்பருடன் கூடிய ஒரு ரசீதைப் பெறுவீர்கள். இதைப் பின்னர் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதார் கார்டில் பிறந்த தேதியில் மாற்றம் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும். இந்த மாற்றம் நேரில் செய்யப்பட வேண்டும்.
ஸ்டெப் 2: உங்கள் பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைக் கொண்டு செல்லுங்கள்.
ஸ்டெப் 3: உங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பிற்காக சேகரிக்கப்படும். பிறந்த தேதியைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் உங்கள் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க URN நம்பர் வழங்கப்படும்.
ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் UIDAI-இன் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளதிற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: மெனுவிலிருந்து ஆதார் புதுப்பிப்பு பகுதியை பார்வையிடவும். உங்கள் புதிய முகவரியை என்டர் செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 3: முகவரி மாற்றம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்தவும். முடிந்ததும், நீங்கள் ஒரு ரசீதைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் ஆதார் ஓரிரு நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications