மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) கடுமையாக உயர்ந்த காரணத்தால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மாறுபட்ட பார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர உள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இருதய நோய் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பல மருந்துகளுக்கு மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியல் (NLEM) இடம்பெற்றுள்ள மருந்துகளின் விலையை மொத்த விலை குறியீடு அடிப்படையில் வருடாந்திர அடிப்படையில் உயர உள்ளது.
NPPA அமைப்பு
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மார்ச் 25 ஆம் தேதி 2022 காலண்டர் ஆண்டுக்கான WPI அளவு 12.12% என மாற்றியது. கடந்த ஆண்டு NPPA அமைப்பு 10.7 சதவீதமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் NPPA அமைப்பு மொத்த விலை குறியீடு அடிப்படையில் அளவீட்டை அறிவிக்கும்.
விலை உயர்வு
இந்த விலை உயர்வு மூலம் சந்தையில் எந்த மருந்துக்கும் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதை உறுதி செய்யவும், இதேவேளையில் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இந்த விலை கட்டுப்பாடு மூலம் பலன் பெறவும் விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது என மத்திய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.
விலை கட்டுப்பாடு
மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்து பொருட்களுக்கு விலை உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி வரும் வேளையில், மருந்து நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வருடமும் WPI அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
விலைவாசி
இந்தியாவில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில், இதை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும், உற்பத்தி பொருட்களில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வு நிறுவனங்கள் விலை சுமையை மக்கள் மீது திருப்ப துவங்கியுள்ளனர்.
பொருட்களின் எடை குறைப்பு
கடந்த ஒரு வருடமாகவே இந்த பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்தாமல் பொருட்களின் எடையை குறைத்து அதேவிலைக்கு விற்பனை செய்வதை கவனித்திருந்தால் இந்த மாற்றம் உங்களுக்கு கட்டாயம் புரிந்திருக்கும்.
CPI, WPI விளக்கம்
இந்தியாவில் பணவீக்கத்தை CPI, WPI என இரண்டு காரணிகளில் கணக்கிடப்படுகிறது. இதில் CPI எனப்படும் நுகர்வோர் பணிவீக்கம் மக்கள் மத்தியில் ஏற்படும் விலை மாற்றத்தை கணக்கிடும், WPI எனப்படும் மொத்த விலை பணவீக்கம் உற்பத்தியாளர் மத்தியில் ஏற்படும் விலை மாற்றத்தை கணக்கிடும்.
மொத்த விலை பணவீக்கம்
தற்போது மருந்து பொருட்கள் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் WPI எனப்படும் மொத்த விலை பணவீக்கம், ஆதாவது மருந்து உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு நுகர்வோர் சந்தையில் மருந்து பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications