சென்னை: மருத்துவ செலவுகள் நமது மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு தினமும் மருந்து மாத்திரை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை என்பது இந்திய குடும்பங்களில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் மருந்து செலவுகளுக்கு என நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் நாளை முதல் அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர இருப்பதால் நாம் மருத்துவ செலவுகளுக்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2024,ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் வலி நிவாரணி உள்ளிட்ட 800க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர இருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்த சோகையை எதிர்க்கும் மருந்துகள், விட்டமின் மாத்திரைகள் மற்றும் கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விலை நாளை முதல் உயர இருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அண்மையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளித்தது. இதன்படி மருந்துகளின் விலை 0.0055% அதிகரிக்க இருக்கிறது.
ஹோல்சேல் பிரைஸ் இண்டக்ஷன் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இருக்கும் மருந்துகளின் விலை 0.0055% உயர்ந்து ஏப்ரல் 1 முதல் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருந்து விலை ஏற்றமானது கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகும்.
முந்தைய ஆண்டுகளில் இந்த மருந்துகளின் விலையானது 10 முதல் 12 % வரை உயர்த்தப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டுமென மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. ஆனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன.
நடப்பாண்டில் மருந்துகளின் விலை உயர்வு பெரிய அளவில் இல்லை என்றாலும் அன்றாடம் மருந்து உட்கொள்ளப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இது கூடுதல் செலவையே ஏற்படுத்தும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications