ஹோம் லோன் வாங்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!

சென்னை: உங்கள் கனவு இல்லத்தை வாங்க லோன் தரும் நிதி நிறுவனங்களை அல்லது வங்கிகளை தேடி கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது.

உங்களுக்கு பொருத்தமான லோன் வழங்குநரை கண்டுபிடிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், உங்கள் கனவு வீட்டை, நீங்கள் வாங்கிய பிறகு, அந்த லோனை திருப்பி செலுத்தும் நாட்கள், உங்களுக்கு சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும், என்றால் நீங்கள் லோன் பெறுவதற்கு முன்பே அவர்களிடமிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

 ஹோம் லோன் வாங்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!

எனவே, அவசரப்படாமல் ஒன்றுக்கு இருமுறை லோன்களுக்கு வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள், திருப்பி செலுத்தும் கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை ஒப்பிட்டுப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் தேவைகளுக்கு சரியான கடன் வழங்குபவரை தீர்மானிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

1. முதலில் உங்களுக்கு லோன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். லோன் வழங்குபவரை தேர்ந்தெடுப்பதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு, அவர்களின் கடந்த கால செயல்திறன் குறித்து தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனைப் பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் லோன் பெற நினைக்கும் வங்கியில் இருந்து, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் கடன் பெற்றுள்ளனரா? என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால், அவர்களிடம் கடன் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் செலுத்திய வட்டி, மாத மாதம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

2. மேலும் கடன் வழங்கும் நிறுவனங்களின் ஹிஸ்டரியை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். அதில், இதற்கு முன் அந்த நிறுவனத்திலிருந்து கடன் பெற்றவர்களின் ரிவ்யூக்களைப் படிக்கலாம். இதன் மூலம் கடன் பெற்றவரின் அனுபவத்தைப் பற்றிய மதிப்பு மிக்க தகவல்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.

3. வட்டி விகிதங்கள் மற்றும் கடன் விதிமுறைகள் ஆகியவற்றை வீட்டுக் கடன் வழங்குபவரை தேர்ந்தெடுப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் உள்ளனவா? என்பதை ஆராய்ச்சி செய்து பிறகு லோன் எடுக்கவும். ஏனெனில் குறைந்தது 1 வருடம் முதல் 10 வருடம் வரை, நீங்கள் வாங்கும் கடனின் அளவைப் பொறுத்து EMI செலுத்த வேண்டும்.

எனவே, வட்டி விகிதங்களைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், நீங்கள் லோன் பெற்றால் EMI செலுத்தும் காலக் கட்டத்தில், பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். எனவே, உங்களுடைய பட்ஜெட்டும், வங்கியின் வட்டி விகிதங்களும் ஒத்துப் போகுமா? என்பதை ஒன்றுக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள்.

4. தற்பொழுது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் வசம் ஈர்க்க போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. எனவே, இது போன்ற நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

5. கடன் பெற்ற பிறகு அதனை திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் கடன் பெற்ற சில மாதங்களில் அனைத்து தொகையையும் செலுத்தி கடனை முடித்துக் கொள்ள முடியுமா? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சில வங்கிகள் குறைந்தது இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை உங்கள் கடனை திருப்பி செலுத்தி முடிக்க அனுமதிக்காது. இது போன்ற திருப்பி செலுத்தும் விதிமுறைகள் குறித்து தெரிந்து கொண்ட பின் கடன் பெறுவது நல்லது.

6. லோன் பெறுவதற்கு முன்பு நீங்கள் சில ஆவணங்களை சேகரிக்க வேண்டும். எனவே, உங்கள் வங்கிகளை அணுகி தேவைப்படும் முக்கிய ஆவணங்களை முன்னதாகவே தயார் படுத்தி வைத்தால் கடன் பெறுவது இன்னும் எளிதாக இருக்கும்.

7. லோன் பெறுவதற்கு முன்பு கடனுக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் அத்துடன் வரும் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பிராசசிங் பீஸ் ஆகியவற்றை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். இதுபோன்ற கட்டணங்களைப் பிற கடன் வழங்கும் நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு ஏதுவான கடன் தரும் நிறுவனங்களை நீங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

8. சில கடன் வழங்குநர்கள் வட்டி, கட்டணம் மற்றும் பிற விவரங்கள் குறித்து தெளிவான தகவல்களை வழங்க மாட்டார்கள். எனவே, இது போன்ற விபரங்களை உங்களுக்கு யார் தெளிவாக எடுத்துரைக்கிறார்களோ, அவர்களை தேர்வு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது உங்கள் நிதி நலனில் நீடித்த விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் நம்பகமான கடன் வழங்குநரை அடையாளம் காண உங்களுக்கு உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+