இந்தியாவில் மாற்று எரிபொருளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் வேளையில் வெறும் 15 ரூபாய் செலவில் 20-25 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய எரிபொருளில் இயங்கும் கார்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வேளையில் மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் அடங்கிய குழு 400 நாட்களாக எவ்விதமான விலை மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை குறித்து சமீபத்தில் ஆலோசனை செய்தது.

இந்த நிலையில் 15 ரூபாயில் எந்த எரிபொருள் கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை தேடுவதற்குள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி-யின் சமீபத்திய பேச்சு மிகவும் முக்கியமானதாக ஆட்டோமொபைல் சந்தையில் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க அதிகப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், பெட்ரோல் உடன் எத்தனால் (ETHANOL) கலந்து விற்பனை செய்யும் முறை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் விரைவில் எத்தனால் (ETHANOL) மட்டுமே எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னோடியாக ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா விரைவில் எத்தனால் (ETHANOL) மட்டுமே எரிபொருளாக கொண்டு இயங்கும் Camry கார்-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த எத்தனால் எரிபொருளில் இயங்கும் Toyota Camry கார் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதேபோல் டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ போன்ற இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் முழுமையாக எத்தனால் (ETHANOL) எரிபொருளில் இயங்கும் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.
மேலும் நித்தின் கட்கரி எத்தனால்-ஐ முழுமையாக பயன்படுத்தும் போது வெறும் 15 ரூபாயில் ஒரு லிட்டர் எரிபொருள்-ஐ பெற முடியும். தற்போது பெட்ரோல் 120 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது, இதேபோல் எத்தனால் 60 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. எத்தனால் மூலம் 40 சதவீதம் மின்சாரம் தயாரிக்கப்படும் காரணத்தால் இதன் சராசரி விலை லிட்டருக்கு 15 ரூபாய் மட்டுமே வரும் என தெரிவித்தார்.
மேலும் எத்தனால் எரிபொருளில் பெட்ரோல்-ஐ காட்டிலும் கூடுதலான ஆக்டேன் இருக்கும் காரணத்தால் மைலேஜ் கூடுதலாக கிடைக்கும். இப்படி இல்லாவிட்டாலும் தற்போது கிடைக்கும் 20 கிமீ மைலேஜ் கட்டாயம் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆனால் எத்தனாலில் இயங்கும் டோயோட்டா கேம்ரி கார் விலை என்ன என்பது தான் முக்கிய கேள்வி..? இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு போட்டியாக எத்தனால் வாகனங்கள் உருவெடுக்குமா என்ற கேள்வியும் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி-யின் 15 ரூபாய் கணக்கீடு உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications