ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமொத்தமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை மட்டுமே நம்பி இயங்கி வந்ததை பெரிய விஷயமாக பார்க்காமல் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது அனைத்து விதமான தடைகளை விதித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு காலம் காலமாக பைப் வாயிலாக கச்சா எண்ணெய், எரிவாயு-வை ஏற்றுமதி செய்து வருவதை மொத்தமாக தடை செய்தது. இது மட்டும் அல்லாமல் கடல் வாயிலாகவும், தரை வாயிலாகவும் அனுப்பப்படும் எரிபொருட்களையும் தடை செய்து ஐரோப்பாவை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் தான் இந்தியாவின் தலையீட்டால் ஐரோப்பா தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய்-ஐ பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகிறது. ஆனால் எப்படி இது சாத்தியம் என்று தானே யோசிக்கிறீங்க, இங்கு தான் இந்தியா தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கு தேவையான கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவுக்கு இணையாக எந்த நாடுகளாலும் சப்ளை செய்ய முடியாது என்பதால், இந்தியா இதை முக்கிய வர்த்தக வாய்ப்பாக எடுத்துக்கொண்டது. ரஷ்யா இந்தியாவுக்கு தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விலையில் அளித்து வருவது அனைவருக்கும் தெரியும் இதை பணமாக்க முடிவு செய்தது இந்தியா.
இந்திய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யும் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ சுத்திகரிப்பு செய்து டீசலாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் ஆசியாவின் எரிபொருள் பங்கு அதிகரித்துள்ளது என ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனமான KPLER தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யா கச்சா எண்ணெய் மீண்டும் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையும் வழியை கண்டுப்பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா வெற்றிகரமாக உலக நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை மொத்தமாக நீக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications