மோசமான நிலையில் ஐரோப்பா.. கரெண்ட் கட், தொழிற்சாலை மூடல்.. குளிரில் நடுங்கும் மக்கள்..!

கேம் ஆப் திரோன்ஸ் சீரியஸ் பார்த்த அனைவருக்கும் வின்டர் ஈஸ் கம்மிங் என்றால் எந்த அளவிற்கு அச்சம், பயம் வரும் என்பது புரியும்.

இதேபோல் தற்போது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தற்போது வின்டர் ஈஸ் கம்மிங் என்றால் பயப்படுகிறது, இதற்கு முதலும் முக்கியமான காரணம்.. வேற யாரு ரஷ்யா தான்.

குளிர்

குளிர்

ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் குளிர்காலம் துவங்க உள்ள வேளையில் போதுமான எரிபொருள், மின்சாரம் இல்லாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் குளிரில் தவிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஐரோப்பியப் பொருளாதாரம்

ஐரோப்பியப் பொருளாதாரம்

இது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் தற்போது பெரும் சரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா ரஷ்யாவின் ஆட்டத்தை ஒடுக்கப் பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடையை விதித்தது, இதில் வேறு வழியே இல்லாமல் ஐரோப்பாவும் ரஷ்யா மீது தடை விதித்தது.

ரஷ்யா

ரஷ்யா

இதைத் தொடர்ந்து ரஷ்யா ஐரோப்பாவைப் பழிவாங்கும் விதமாக எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தியது, இதன் எதிரொலியாக ஐரோப்பா தற்போது மொத்தமாக முடங்கியுள்ளது.

எரிவாயு மற்றும் எரிபொருள்

எரிவாயு மற்றும் எரிபொருள்

ஐரோப்பா மொத்தமும் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு ரஷ்யாவை மட்டுமே நம்பி இத்தனை வருடம் காலத்தை ஓட்டிய நிலையில் இதன் பாதிப்பை உணராமல் அமெரிக்கா, பிரிட்டன் துணை இருக்கும் காரணத்தால் ஐரோப்பா தடை விதித்தது.

தொழிற்சாலை மூடல்

தொழிற்சாலை மூடல்

ரஷ்யாவில் இருந்து எரிவாயு, கச்சா எண்ணெய் செல்லாத நிலையில் ஐரோப்பாவில் தற்போது அதிக எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது, போதுமான எரிவாயு இல்லாத காரணத்தால் குளிர் காலத்தில் வெப்பத்தை நிலைநிறுத்த போதுமான கேஸ், மின்சாரம், எண்ணெய் என அனைத்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

செக் குடியரசு, ஸ்லோவாக்கியா

செக் குடியரசு, ஸ்லோவாக்கியா

இதன் மூலம் தற்போது ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது ஜெர்மனி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா நாடுகள் தான். இந்த நிலையில் ஐரோப்பா தற்போது தனது எரிசக்தி தேவை மின்சாரத்தை அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வருகிறது.

ஐஎம்எப்

ஐஎம்எப்

அக்டோபர் 11 ஆம் தேதி ஐஎம்எப் வெளியிட்ட அறிவிப்பில் IMF அமைப்பு வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுப் பொருளாதாரக் கணிப்பில் ஐரோப்பிய வளர்ச்சி விகிதத்தை 2.5%-ல் இருந்து 0.5% ஆகக் குறைத்துள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன்

இதுவே பிரிட்டன் நாட்டின் வளர்ச்சி அளவு 0.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த அளவு கட்டாயம் மீண்டும் குறைந்த மைனஸ் அளவுக்குச் செல்லும், காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு. OECD அமைப்பு இன்னும் மோசமான அளவை கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+