ஐரோப்பா முழுவதும் சூப்பர்மார்கெட் மீது சைபர்அட்டாக்.. ஆயிரக்கணக்கான ஃப்ரீசர்கள் முடங்கியது.. அலறும் மக்கள்..!!

ஐரோப்பாவில் முக்கிய நாடுகளான பெல்ஜியம், ஸ்வீடன், லக்சம்பர்க், அயர்லாந்து, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஃப்ரீசர்கள் ஹேக் செய்யப்பட்டு வெப்ப நிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தியுள்ளது ஹேக்கர் குழு.

சமீபத்தில் சைபர் அட்டாக் மூலம் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் அந்நாட்டு மக்கள் அனைவரையும் 3 நாட்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பணம் போன்ற அத்தியாவசியமான பொருட்களை எப்போது சேமித்து வைத்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் சூப்பர்மார்கெட் மீது சைபர்அட்டாக்.. ஆயிரக்கணக்கான ஃப்ரீசர்கள் முடங்கியது.. அலறும் மக்கள்..!!

இதை தொடர்ந்து பல நாடுகள் அடுத்தடுத்து இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது எதிர்பார்க்கப்பட்ட படியே மாபெரும் சைபர் அட்டாக் நடந்துள்ளது.

இதில் முக்கியமாக பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் 40 Delhaize சூப்பர் மார்கெட்-கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் தற்போது சைபர் அட்டாக் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஃப்ரீசர்களும் Sabcobel என்னும் நிறுவனம் தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தயாரிக்கப்பட்ட ஃப்ரீசர்களில் defrost mode ஆன் செய்யப்பட்ட காரணத்தால் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதேபோன்ற தாக்குதல் தான் கடந்த மாதம் பிரான்ஸ் சூப்பர்மார்க்கெட்டில் நடந்தது.

தற்போது நடந்துள்ள சைபர் அட்டாக் மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சூப்பர்மார்கெட்-ல் விற்பனைக்காக வைக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களும் வீணாகி வருகிறது.

இதேவேளையில் , அமெரிக்காவில் உள்ள 6 ராணுவத் தளங்களில் இருக்கும் ஃப்ரீசர்கள் திடீரென செயலிழந்து, அதிக அளவிலான உணவுப் பொருட்கள் கெட்டுப்போனது. தற்போது இதுவும் சைபர் அட்டாக்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் இந்த சைபர் அட்டாக் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி அமெரிக்காவுக்கும் சென்றுள்ளது மூலம் கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே கூறப்பட்டது போல் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மக்கள் 7-10 நாட்களுக்கான உணவு பொருட்களை எப்போது தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. உலகின் பல நாடுகளில் உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை உயர்வும் மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் இத்தகைய சைபர் அட்டாக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+