சீனா சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை உலகிலேயே முதல் முறையாக மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அமெரிக்கா முதல் இந்திய வரையில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சி தொடர்பான பணிகளைச் செய்து வரும் நிலையில் சீனா அனைத்து நாடுகளையுமும் முந்திக்கொண்டது.
தற்போது சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவும் டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் யூரோ நாணயத்தை முதற்கட்டமாக மக்கள் மத்தியில் சோதனைக்காக அறிமுகம் செய்துள்ளது.
புதிய டிஜிட்டல் யூரோ நாணயம்
ஐரோப்பிய மத்திய வங்கி அறிமுகம் செய்துள்ள புதிய டிஜிட்டல் யூரோ நாணயத்தின் பாதிப்புகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அதிகாரப்பூர்வமாகச் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது ஐரோப்பிய மத்திய வங்கி.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தாமல் அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தினர், இதேபோல் பல கோடி பேர் கிரிப்டோகரன்சியில் அதிகளவில் முதலீடு செய்தனர். இந்த மாற்றத்தைத் தடுக்கவே தற்போது டிஜிட்டல் நாணயங்களை உலக நாடுகள் அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது.
சரி டிஜிட்டல் யூரோ என்றால் என்ன..?!
முதலில் டிஜிட்டல் யூரோ என்பது கிரிப்டோகரன்சி இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், தற்போது அனைவரும் பயன்படுத்தும் யூரோ நாணயத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தும் திட்டம் தான் இந்த டிஜிட்டல் யூரோ. இது சீன உட்பட அனைத்து நாட்டின் டிஜிட்டல் நாணயத்திற்கும் பொருந்தும்.
பாதுகாப்பான பணப் பரிமாற்றம்
டிஜிட்டல் யூரோ மூலம் பணத்தை எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும். இதேபோல் பணத்தை அரசு சிறப்பான முறையில் டிராக் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் கருப்புப் பணத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும்.
டிஜிட்டல் யூரோ பயன்பாடு
மேலும் இந்த டிஜிட்டல் யூரோ மூலம் யார் வேண்டுமானாலும் தங்களது ஸ்மார்போன், ஸ்மார்ட்கார்டு மூலம் அனைத்து இடத்திலும் பணத்தைச் செலுத்த முடியும், இதனால் வெளிநாட்டுப் பேமெண்ட் நிறுவனங்களான மாஸ்டர்கார்டு, விசா போன்ற நிறுவனங்களை நம்பியிருக்கத் தேவையில்லை.
ஐரோப்பிய மத்திய வங்கி
இந்த டிஜிட்டல் யூரோ திட்டத்தைப் பயன்படுத்துவதிலும், சேமிப்பதிலும் இருக்கும் சிக்கல்களையும், ஆபத்துகளை ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய மத்திய வங்கி சோதனை கட்டமாகவே தற்போது அறிவித்துள்ளது. முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு வர பல மாதங்கள் ஆகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications