பெயர் மாற்றிய உடனே மெகா அறிவிப்பு.. ஈவி துறையில் கிங்மேக்கராக மாறும் டாடா.கார்ஸ்!

இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது பிராண்ட் பெயரை டாடா.கார்ஸ் என மாற்றியது, இதேபோல் ஈவி பிரிவிற்கும் டாடா.ஈவி என்ற பிராண்ட் பெயரை அறிவித்து. இதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்பை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பணிகள் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து சந்தை பங்கீடு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2-3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் EV சந்தைப் பங்கில் டாடா முன்னேற்றம் கண்டு வருகிறது என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

பெயர் மாற்றிய உடனே மெகா அறிவிப்பு.. ஈவி துறையில் கிங்மேக்கராக மாறும் டாடா.கார்ஸ்!

குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் டாடா EV-களுக்கான புக்கிங் சுமார் 3 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளன. ஆனால், அதிகரித்து வரும் தேவையை முழுமையாக வர்த்தகமாக மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் டாடா நிறுவனத்துக்கு தற்போது உற்பத்தித் திறன் கட்டுப்பாடாக உள்ளது என இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகன துறையில் இருப்பது தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் வர்த்தக சந்தை மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் டாடா மோட்டாஸ் மிகவும் ஸ்மார்ட்டாக காரின் விலை, மாடல், வடிவம் என அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் கார்களை அறிமுகம் செய்து வரும் காரணத்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களுக்கான புக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதேபோன்ற வர்த்தகத்தையும், புக்கிங் எண்ணிக்கையும் அந்த பண்டிகை கால விற்பனையிலும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது செப்டம்பர் - டிசம்பர் வரையிலான காலாண்டு என்பது இந்திய வர்த்தக சந்தைக்கு மிகவும் முக்கியமானது.

ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனையான எலக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கையை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் மொத்த EV விற்பனை ஜூலை 2025-ல் 17,953 ஆக இருந்த நிலையில், ஜூலை 2026-ல் 33,432 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஓராண்டில் மொத்த EV விற்பனை 86% வளர்ச்சி கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 2026-ல் 13,903 EVகளை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. ஜூலை 2025-ல் 6,732 வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 107% வளர்ச்சி கண்டுள்ளது. இத்போல் மஹிந்திரா 7,851 EV கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 3,415 ஆக இருந்த விற்பனை 130% அதிகரித்துள்ளது.

JSW MG நிறுவனத்தின் EV கார் விற்பனை 5,901-ல் இருந்து 5,769 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் 2% சரிவு ஏற்பட்டுள்ளது. Maruti Suzuki ஜூலை 2026-ல் புதிதாக 1,614 EVகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+