மத்திய நிதியமைச்சர் வியாழக்கிழமை அன்று இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் எலக்ட்ரிக் வாகனத் துறை முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு எலக்ட்ரிக் வாகன துறையில் ஒட்டுமொத்த எகோசிஸ்டம்ஸ்-ஐ மேம்படுத்தும் வகையில், அதன் சார்ஜிங் கட்டமைப்பை விரிவுபடுத்தும் என்று கூறினார்.

மேலும் பொதுப் போக்குவரத்துத் துறையில் மத்திய அரசு நிதியுதவியுடன் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்றும் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் 4 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளது.
நெட் ஜீரோ 2070: காற்றாலைக்கு நிதியுதவி. நிலக்கரியை எரிபொருளாக மாற்றும் கேசிபிஷேன் மற்றும் லிக்விபிகேஷன் அளவீட்டை உயர்த்துவது. சிஎன்ஜி, பிஎன்ஜி, கம்பிரஸ்டு பயோகேஸ் ஆகியவற்றில் கலப்பு. பயோமாஸ் அக்ரிகேஷன் இயந்திரங்களுக்கு நிதியுதவி ஆகியவற்றைப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோலார்: வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் 1 கோடி வீடுகளுக்கு மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
எலக்ட்ரிக் வாகனம்: எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். எலக்ட்ரிக் வாகன துறையில் ஒட்டுமொத்த எகோசிஸ்டம்ஸ்-ஐ மேம்படுத்தும் வகையில், அதன் சார்ஜிங் கட்டமைப்பை விரிவுபடுத்தும்.
புதிய திட்டம் அறிமுகம்: biomanufacturing மற்றும் bio-foundry ஆகிய 2 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் வியாழக்கிழமை இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications