சென்னை: உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், கடந்த 3 வருடமாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பதிலும், விற்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஹைப்ரிட் கார்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்தது மட்டும் அல்லாமல் இப்பிரிவில் அறிமுகம் செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.
ஏனென்றால் உலகளவில் தற்போது ப்யூர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை குறைந்து வருகிறது. இதனால் வர்த்தகம், வருமானம் இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்யவும், இதேவேளையில் முதலீட்டாளர்களின் வருவாயை அதிகரிக்க 4 டிரில்லியன் வோன் அதாவது கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது ஹூண்டாய்.

ஹூண்டாய் நிறுவனம் இன்று நடத்திய இன்வெஸ்டார் டே-வில் தனது புதிய உத்தியை வெளியிட்டது. புதிய திட்டங்கள் படி அடுத்து ஹூண்டாய் அறிமுகம் செய்யும் ஹைப்ரிட் வாகனங்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்தது.
இந்த 14 ஹைப்ரிட் கார்களில் காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் கார்களுக்கு அப்பால் பெரிய மற்றும் ஆடம்பர வாகனங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது. ஹைப்ரிட் கார்கள் மூலம் தனது உற்பத்தி மற்றும் விற்பனை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும் 2030 ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 2 மில்லியன் கார்களை விற்பனை செய்யும் இலக்கில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஹூண்டாய் தனது பைபேக் திட்டத்தை அறிவித்த பின்பு இந்நிறுவனத்தின் பங்குகள் பிற்பகல் வர்த்தகத்தில் 5.3% வரை அதிகரித்தது. இதேபோல் வருடத்திற்கு 10000 வோன் ஈவுத்தொகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆரம்பம் முதல் ஹைப்ரிட் கார்கள் தான் பெஸ்ட், எலக்ட்ரிக் கார்கள் சரியான தேர்வாக இருக்காது என பல முறை கூறியது மட்டும் அல்லாமல், ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரியதாக ஹைப்ரிட் கார்கள் அறிமுகம் செய்யாமல் ஹைட்ரஜென் வாயு மூலம் இயங்கும் கார் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வந்தது.
இந்த நிலையில் உலகின் 3வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் ஹைப்ரிட்களின் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் EV தேவையில் ஏற்பட்ட உலகளாவிய மந்தநிலை தான்.
ஃபோர்ட் மோட்டார் நிறுவனம், போர்ஷே ஏஜி மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் குரூப் ஏஜி ஆகியவை சமீப மாதங்களில் தங்கள் EV விற்பனை இலக்குகளை குறைத்துள்ளன. டெஸ்லா இன்க் கடந்த ஆண்டு விற்ற 1.8 மில்லியன் கார்களின் எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளது.
உலகம் முழுவதும் EV கார்கள் மக்கள் மத்தியில் பரவலாக்கும் வரையில் ஹைப்ரிட் மற்றும் புதிய EREV கார்களின் அறிமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் EV மந்தநிலையைச் சமாளிக்க முடிவு செய்துள்ளது ஹூண்டாய்.
EV கார்களின் முக்கியமான பிரச்சனை ரேஞ்ச் அச்சம், அதை தாண்டி நீண்ட காலத்திற்கு இந்த கார்களை பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் தான். காரணம் பேட்டரிக்களுக்கு கார் நிறுவனங்கள் 5- 8 வருடம் வரையில் மட்டுமே வாரன்டி வழங்குகிறது. இந்த பேட்டரி பேக்-ஐ மாற்ற வேண்டுமாயின் கார் விலையில் சுமார் 40-60 சதவீதத்தைக் கொடுத்து பேட்டரியை வாங்க வேண்டும்.
ஹூண்டாய் விரைவில் வட அமெரிக்கா மற்றும் சீனாவில் ஒரு நீண்ட ரேஞ்ச் கொண்ட EV காரை (EREV Car)வெளியிடும். EREV காரில் ஒரு சிறிய பெட்ரோல் எஞ்சினை கொண்டு ஆன்-போர்டு பேட்டரியை சார்ஜ் செய்யும் கட்டமைப்பை கொண்டு இருக்கும். இந்த கார் ஒரே சார்ஜில் 900 கிலோமீட்டருக்கும் (560 மைல்கள்) அதிகம் பயணிக்க முடியும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications