தமிழ்நாட்டில் இருந்து உலகளவில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்துடன் தென் கொரியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரையிலான தொகையை அடுத்த 7 -10 வருடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹூண்டாய் மோட்டார் மற்றும் தமிழக அரசு வியாழக்கிழமை (மே 11) கையெழுத்திட உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டு திட்டம் மூலம் தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவை விரைவாக எட்டுவது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு ஆட்டோமொபைல் துறையில் மாற்று எரிபொருள் வாகன பிரிவில் முன்னோடியாக இருக்கவும் முடியும்.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது முதலீடு செய்ய உள்ள 15000 கோடி ரூபாய் முதலீடு என்பது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் பியூயல் செல் மூலம் இயங்கும் வாகனங்களுக்காக பிரத்தியேகமாக செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கார்களை பயன்படுத்துவதை வேகமாக குறைத்து வரும் வேளையில் ஹூண்டாய் முதலீடு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியில் ஓலா, டிவிஎஸ் ஆகியவற்றின் மூலம் முன்னோடியாக இருக்கும் வேளையில், தற்போது எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைட்ரஜன் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஹூண்டாய் முதலீடு மூலம் முன்னோடியாக உயர போகிறது.

இந்திய பயணிகள் வாகன சந்தையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் எலக்ட்ரிக் வாகன சந்தை தான் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இலக்காக உள்ளது. இந்த நேரத்தில் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக 15000 கோடி முதலீடு செய்து டாடா, மஹிந்திரா, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் சுமார் 80 சதவீதக்தை டாடா மோட்டார்ஸ் மட்டுமே வைத்திருக்கும் நிலையில், இந்த ஆதிக்கத்தை ஒடுக்க MG COMET என்னும் சிறிய எலக்ட்ரிக் கார்-ஐ வெறும் 7.98 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. டாடாவின் மலிவான எலக்ட்ரிக் காரின் துவக்க விலையே 8.69 லட்சம் ரூபாய். இப்படி போட்டி நிறைந்த தருணத்தில் தான் ஹூண்டாய் 20000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை தமிழ்நாட்டில் செய்ய முடிவு செய்துள்ளது.
இன்னும் சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலைக்கு தீர்வு காணப்படவில்லை, இதை உள்நாட்டு முன்னணி நிறுவனங்களான டாடா, மஹிந்திரா, மாருதி சுசூகி ஆகியவற்றில் ஒன்றை கைப்பற்றி முழு எலக்ட்ரிக் கார் தாயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றினால் ஹூண்டாய் உடன் எளிதாக போட்டிப்போட முடியும்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications