ராஜஸ்தானில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க இ-வாகன கொள்கையைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் எலக்ட்ரிக் வாகன கொள்கையின் படி வியாழக்கிழமை 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022, செப்டம்பர் 1- ம் தேதி முதல் ராஜஸ்தானில் இந்த எலக்ட்ரிக் வாகன கொள்கை நடைமுறைக்கு வருகிறது.
ஒப்புதல்
ராஜஸ்தானின் இந்த எலக்ட்ரிக் வாகன கொள்கைக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் சென்ற மே 24-ம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன்படி மாநில அரசின் ஜிஎஸ்டி வரி பங்கீட்டில் இருந்து 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்
எலக்ட்ரிக் வாகன கொள்கை பயன்பாட்டுக்கு வந்தால் பெட்ரோல், டீசலால் ஏற்படும் மாசு குறையும். எனவே அதிகளவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மாநில அரசை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள்
இரண்டு சக்கர எலக்ட்ரிக் வாகனம் வாங்கும் போது மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி பங்கில் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை திரும்பப் பெற முடியும்.
மூன்று சக்கர வாகனம்
அதுவே மூன்று சக்கர வாகனம் என்றால் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியிலிருந்து 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விலக்கு பெறலாம். முதற்கட்டமாகச் சென்ற ஆண்டு எலக்ட்ரிக் வாகனம் வாங்கியவர்களுக்கு 18 கோடி ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதில் 5 கோடி ரூபாய் 3000 வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு வெளியிட்ட எலக்ட்ரிக் வாகன கொள்கையின் படி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு 100% வரை மாநில அரசின் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications