எனது பென்சில் விலை ஏறிபோச்சு.. மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி.. இணையத்தை கலக்கும் கடிதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலைவாசி உயர்வினை குழந்தைகள் கூட உணரத் தொடங்கிவிட்டனர்.. அதற்கு சிறந்த உதாரணம் தான் உத்திரபிரதேசத்தினை சேர்ந்த சிறுமியின் கடிதம்.

 

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கன்னெளஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்து துபே என்ற சிறுமி, பிரதமருக்கு விலைவாசி ஏற்றம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதம் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. அப்படி என்ன தான் எழுந்தியுள்ளார் வாருங்கள் பார்க்கலாம்.

கரும்பு தின்னக் கூலி.. அதுவும் 61 லட்சம்..! கரும்பு தின்னக் கூலி.. அதுவும் 61 லட்சம்..!

அம்மா அடிக்கிறாங்க?

அம்மா அடிக்கிறாங்க?

என் பெயர் கிரித்தி துபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். விலைவாசி உயர்ந்து விட்டது. இதன் காரணமாக எனது பென்சில் ரப்பர் விலையும் உயர்ந்து விட்டது. நான் பென்சில் கேட்டதற்காக எனது அம்மா என்னை அடிக்கிறார். நான் என்ன செய்வது? எனது பென்சிலை மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என மழலை வார்த்தையில் கடிதத்தினை எழுதியுள்ளார்.

மேகி கூட வாங்க முடியல

மேகி கூட வாங்க முடியல

மேலும் என்னிடன் 5 ரூபாய் தான் உள்ளது. ஒரு மேகி பாக்கெட் வாங்க வேண்டும் எனில் கடைக்காரர் 7 ரூபாய் கேட்கிறார். இதனால் என்னால் மேகி கூட வாங்க முடியவில்லை என்று தனது விலைவாசி உயர்வு குறித்தான அனுபவத்தினையும் விளக்கம் அளிக்க முயல்கிறார்.

கோரிக்கை
 

கோரிக்கை

இது குறித்து அந்த மாணவியின் தந்தை விஷால் துபே, தனது மகளின் மான் கி பாத் என்று கூறியுள்ளார். உண்மையில் பலருடைய மனதிலும் உள்ள குரல்கள் இது தான். மாணவியின் மழலை குரல் நிச்சயம் ஆட்சியாளர்கள் மத்தியில் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதவ தயார்

உதவ தயார்

இதற்கிடையில் சிறுமியின் கடித்தத்தினை சமூக வலைதளத்தில் பார்த்த சிப்ரமாவ் மாவட்டத்தின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அசோக் குமார், குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் இந்த கடிதம் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதியளித்துள்ளார்.

மக்களின் கோரிக்கை

மக்களின் கோரிக்கை

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் பயன்படுத்தும் பேனா, பென்சில், ரப்பர் முதல் கொண்டு எண்ணெய், கமாடிட்டிகள் என பலவும் விலையேற்றம் கண்டுள்ளன. ஒருபுறம் விலைவாசியினை அரசு கட்டுப்படுத்த பற்பல முயற்சிகள் எடுத்து வந்தாலும், இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு பலரின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Even my pencil is costly now: A 6-year-old girl from Uttar Pradesh wrote a letter to Modi

Even my pencil is costly now: A 6-year-old girl from Uttar Pradesh wrote a letter to Modi/எனது பென்சில் விலை ஏறிபோச்சு.. மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி.. இணையத்தை கலக்கும் கடிதம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X