எல்&டி தலைவர் சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது.
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தால் அந்த ஊழியருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஏதாவது இருக்குமா , இது அவருடைய உடல் நலனிலும் மன நலனிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு நிறுவன தலைவர்களும் கூட வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றனர். எல்&டி நிறுவனம் சுப்பிரமணியனின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு அர்த்தத்தில் பரப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து இந்த 90 மணி நேரம் வேலை என்கின்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் நிரம்பி காணப்படுகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வரக்கூடிய நிர்மல்ய கஜூரி என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவில் 40 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டால் தற்போது வாரத்திற்கு 70 - 90 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என கூறும் நிறுவன தலைவர்கள் எல்லாம் முதலில் தனிப்பட்ட வாழ்க்கையை பாருங்கள் என்று கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும் தன்னுடைய நண்பர்கள் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் அவர்களுக்கு அதற்கான கூடுதல் சம்பளமும், கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கான உணவையும் நிறுவனங்கள் வழங்குகின்றன, ஆனால் இந்திய நிறுவனங்களோ அதே சம்பளத்திற்கு கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்துகின்றன எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா, சீனா போன்ற ஐரோப்பிய நாடுகளில் 40 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்கள் கூடுதல் சம்பளம் பெறுகிறார்கள், இந்தியாவில் ஏன் அப்படி இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி வைட் காலர் ஊழியர்களை வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணி அமர்த்தினால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த நிறுவனமும் இதனை மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக எல்&டி தலைவர் சுப்பிரமணியன், எத்தனை மணி நேரம் தான் மனைவி முகத்தை பார்த்து கொண்டிருக்க முடியும் , ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்யுங்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்யுங்கள் என ஊழியர்களிடம் கூறும் வீடியோ வெளியாகி பெரிய விவாவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எல்&டி நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி சோனிகா முரளிதரன் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுப்பிரமணியன் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அவர் ஊழியர்கள் கட்டாயம் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என குறிப்பிடவில்லை நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்ற முறையில் இதை தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் என்ன கூறினார் என்பதையும் அவர் வார்த்தைகளின் நோக்கத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ள சோனிகா முரளிதரன், ஊழியர்களையும் தனது குடும்பமாக கருதும் ஒரு தலைவர் அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications