சூயஸ் கால்வாயில் தரை தட்டிய தைவான் எவர்கிரீன் கப்பல் அதன் ஊழியர்களுக்கு 5 வருட சம்பளத்தை போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த Evergreen Marine நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாதச் சம்பளத்தை ஊதியமாக அள்ளி கொடுத்திருப்பது உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களை வியப்படைய வைத்துள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான Evergreen Marine, அதன் ஊழியர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸை அறிவித்துள்ளது.
அதன்படி இந்நிறுவனத்தின் ஊழியர்கள் 5 ஆண்டிற்கு நிகரான போனஸை ஊழியர்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது.
தொடர் ஹிட்!
எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆண்டு இறுதியில் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டில் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு 40 மாத சம்பளத்தை போனஸாக வழங்கியது.
போனஸ்
இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையை எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் அண்மையில் ஊழியர்களுக்கு வழங்கியது. குறைந்தபட்சம் 45 மாத ஊதியமும் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு 52 மாத ஊதியமும் போனஸாக வழங்கப்பட்டன.
லாபம்
2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் Evergreen Marine நிறுவனத்தின் லாபம் மட்டும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் என கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அதன் லாபமானது 1300% வரை உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
போனஸை அள்ளிக் கொடுக்கும் கப்பல் நிறுவனம்!
இந்நிலையில், ஊழியர்களுக்கு 5 வருடம் வரையிலான சம்பளத் தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக வேலை செய்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 52 மாதம் வரையிலான சம்பளத்தை போனஸாக அள்ளி கொடுத்துள்ளது Evergreen Marine நிறுவனம்.
60 லட்சம் ரூபாய்
இதன்மூலம், இந்நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்த ஊழியர் நான்காண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுவார். ஜூனியர் லெவல் ஊழியருக்கான அடிப்படை சம்பளம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில், அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தால் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை போனஸாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சில கோடிகளை போனஸாக பெற்றிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அசராத லாபம்!
கோவிட்-19 தொற்று சமயத்தில் கடல்வழி வணிகம் சிறப்பாக செயல்பட்டதால் எவர்கிரீன் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்ந்தது. அதனால் இந்நிறுவனத்தின் பங்கின் விலையும் 2021 ஆம் ஆண்டு 250% உயர்ந்து, 2022 இல் 54% வரை சரிவை பதிவு செய்தது. சில சிக்கல்கள் இருந்தாலும், நிறுவனம் 2022 நிதியாண்டில் சுமார் 16.25 பில்லியன் டாலர் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
கோவிட்-19 லாக்டவுனுக்கு பிறகு உலகளாவிய கப்பல் சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்ததால் இந்நிறுவனம் அதிக லாபத்தை ஈட்ட காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல்!
உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் நிர்வாகம் செய்யும் Ever Given கப்பல் 2021 ஆம் ஆண்டு தரை தட்டியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications