மாத சம்பளக்காரர்களே.. ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் உடலுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய இளம் தலைமுறையினர் பணி, பணம், வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு வேகமாக ஓடி வரும் வேளையில் உடல் நலம் குறித்து கண்டுகொள்வது இல்லை, உடலுக்கு பெரிய பாதிப்பு வந்த பின்பு தான் அற்கான பணிகளை செய்கிறோம். இத்தகைய நிலை மிகவும் தவறானது என்பதால் நம் உடலை மேம்படுத்தும் சில முக்கியமான விஷயத்தை தெரிந்துக்கொள்வோம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இயற்கையாக நமது உடலுக்குக் கிடைத்த ஒரு அரிய வரப்பிரசாதம் ஆகும். அவற்றின் நன்மைகள் ஏராளம், அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் உள்ள செல்கள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் என்ற மூலக்கூறுகளால் அழிவதைத் தடுத்து பாதுகாக்கின்றன.

உடலுக்குள் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களாலும் பல்வேறு வெளிப்புற அம்சங்களாலும் இந்த ஃப்ரீ ரேடிக்கல் மூலக்கூறுகள் உருவாகின்றன. இவை நமது உடல் செல்களின் திறனை அழித்து பல்வேறு நோய் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதனால் இதயக் கோளாறுகள், கேன்சர், மூப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வெளிப்படுத்தும் எலக்ட்ரான்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து ஒழிக்கின்றன. இதனால் உடலுக்கு தீங்கிழைக்கும் மூலக்கூறுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடென்களை எளிமையாக வருணிப்பது என்றால் அவைதான் நம் உடலின் பாதுகாப்பு மூலக்கூறு கேடயமாகும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருவகைப்படும். முதலாவது எண்டோஜீனஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். இவை உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகின்றன. இவை உடலின் நுட்பமான பாதுகாப்பு அமைப்பின் அங்கமாகும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றுகின்றன.

என்ஜைமேட்டிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் : சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ், கேட்டலேஸ், குளுடாதியோன் பெராக்ஸிடேஸ் ஆகியவை உடலின் அத்தியாவசியமான பாதுகாப்புக் கூறுகளாகும். இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன. இந்த சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூடேஸ் ஆக்ஸினேற்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து செல் அழிவிலிருந்து காக்கின்றது.

நான்-என்ஜைமேட்டிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் : யூரிக் ஆசிட், பிலிரூபின் மற்றும் பிற நான்-என்ஜைமேட்டிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் பாதுகாப்பு அமைப்புக்கு உதவுகின்றன. ஆக்ஸினேற்ற பாதிப்புகளில் இருந்து உடலை யூரிக் ஆசிட் பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எக்ஸோஜீனஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வெளிப்புற மூலங்கள் மூலம் குறிப்பாக உணவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதிக்கின்றன. பல்வேறு உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகளில் இருந்து இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. முக்கியமான சில அம்சங்கள்-

வைட்டமின்கள்: வைட்டமின் சி(அஸ்பாரிக் அமிலம்) வைட்டமின் ஈ(டோகோபெரோல்) ஆகியவை முக்கியமான எக்ஸோஜெனஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். ஆக்ஸினேற்ற பாதிப்புகளில் இருந்து உடலை வைட்டமின் சி பாதுகாப்பதாகத் தெரியவந்துள்ளது.

கேரோட்டினாய்டுகள்: வைட்டமின் ஏ-யில் இருக்கும் பீட்டா-கேரட்டீன் ஒரு சிறந்த எக்ஸோஜீனஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். நாள்பட்ட நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் பீட்டா-கேரட்டீனுக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாலிபீனால்கள்: பழங்கள், காய்கறிகள், சிவப்பு ஒயின் ஆகியவற்றில் இருக்கும் பாலிபீனால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தன்மை கொண்டுள்ளன. உடலுக்குள் வீக்கம், ஆக்ஸினேற்ற பாதிப்புகளை இந்த பாலிபீனால்கள் தடுக்கின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் நன்மைகள்:
லூட்டீந், ஜெக்ஸான்தின், வைட்டமின் சி ஆகியவை கண் பார்வைக்கு நன்மை செய்கின்றன. வயது தொடர்பான கண் நோய்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா-கேரட்டீன், ஜிங்க், காப்பர் ஆகியவை ஒருவரது வயது தொடர்பான கண் நோயைத் தடுக்கின்றன.

அல்ட்ரா வயலெட் ரேஸ் எனப்படும் புற ஊதாக் கதிர்களினால் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் முதுமையடைவதையும் தடுக்க முடிகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. ஒட்டுமொத்த சருமப் பாதுகாப்பையும் இதன் மூலம் பெறலாம்.

சுவாசக் கோளாறுகளைப் போக்கி நுரையீரலைப் பாதுகாக்கும் தன்மை ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்கு உள்ளது. வைட்டமின் சியை உட்கொள்ளுவதன் மூலம் ஜலதோசத்தின் கடுமையிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

மாத சம்பளக்காரர்களே.. ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் உடலுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நரம்பியல் கோளாறுகளான பார்க்கின்ஸன் நோய், அல்ஜீமர் போன்றவற்றிலிருந்து ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம்மைக் காக்கின்றன. உணவுகளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் ஈ அல்ஜீமர் நோயைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. பல்வேறு உணவுவகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பல பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சையில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. கிவி, பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றிலும் வைட்டமின் சியும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பலவும் நிறைந்துள்ளன.
அடர்த்தியான பச்சை காய்கறிகளான பசலைக்கீரை, கேல் ஆகியவற்றில் லூட்டின், ஜெக்ஸாதின் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் ப்ராக்கோலி, ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட், குடமிளகாய் ஆகியவற்றிலும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. பாதாம், வால்நட், சூரியகாந்தி பூ விதை ஆகியவற்றில் வைட்டமின் ஈ உள்ளது. சியா விதை, ஃப்ளாக்ஸ் விதை ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

கிரீன் டீயில் கேட்டிசின் எனப்படும் ஃப்ளாவினாய்டில் முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. பிளாக் டீயிலும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. டார்க் சாக்லெட்களில் ஃப்ளாவினாய்டு உள்ளது. இதிலுள்ள கோகோ சத்து அதிக பலன்களைத் தருகிறது.

சிவப்பு ஒயினில் உள்ள ரிசல்வெரடோல் சத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. சிவப்பு ஒயினை மிதமான அளவில் பருகினால் அனைவருக்கும் நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+