அதிகப்படியான உற்பத்தி செலவு மற்றும் உணவு பணவீக்கத்தின் காரணமாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வேகமாக நகரக்கூடிய நுகர்வோர் பொருட்களை (FMCG) உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடினமான காலத்தை சந்தித்து வருகின்றன. ஏனெனில் இந்த நிறுவனங்களின் லாப விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. கூடுதலாக, இந்த FMCG நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் பாமாயில், காபி மற்றும் கோகோ போன்ற மூலப்பொருட்களின் விலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, சில FMCG நிறுவனங்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இது போன்ற நுகர்வோர் பொருட்களின் விலை ஏறும் பட்சத்தில் அது ஏழை எளிய குடும்பங்களை வெகுவாக பாதிக்கும். ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), மேரிகோ, ஐடிசி மற்றும் டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (TCPL) போன்ற பெரிய FMCG நிறுவனங்கள், மக்களிடையே தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களின் நுகர்வு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

டீ, பிஸ்கட், டூத் பேஸ்ட், சோப், சோப் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்களை இந்த FMCG நிறுவனங்கள் தான் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் விலை ஏற்றத்தை அறிவித்தால்.. அது தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சந்தையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, எஃப்எம்சிஜி துறையின் மொத்த விற்பனையில் 65 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை நகர்ப்புறங்களில் தான் உள்ளது. ஆனால் இந்த முறை நகர்ப்புற சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கிராமப்புற சந்தைகள் தங்கள் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
GCPL-இன் தலைவரான சுதீர் சிதாபதி கூறுகையில், இரண்டாவது காலாண்டின் முடிவுகளை அறிவிக்கும் போது, தற்போதைய இடையூறுகளை ஒரு தற்காலிக கட்டமாகவே பார்க்கிறோம் என்று தெளிவுபடுத்தினார். லாப விகிதத்தை மீட்டெடுக்க செலவுகளை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை கவனமாக திட்டமிடவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவை போன்ற காரணங்கள் இருந்தாலும் GCPL நிறுவனம் தொடர்ந்து சிந்தால், கோத்ரேஜ் நம்பர் 1 மற்றும் ஹிட் போன்ற பிரபலமான பிராண்டுகளில் நிலையான செயல் திறனை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டாபர் இந்தியா, செப்டம்பர் காலாண்டில் அதிக விலைவாசி மற்றும் நகர்ப்புற தேவை குறைவு ஆகியவற்றால் சவாலான சூழலை எதிர்கொண்டது. டாபர் சியவன்ப்ராஷ், புதினா ஹரா மற்றும் ரியல் ஜூஸ் போன்ற பிற தயாரிப்புகளையும் வெளியிடுகிறது.
டாபர் இந்தியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 417.52 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 17.65 சதவீத சரிவைப் பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் மட்டும் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 5.46 சதவீதம் சரிந்து 3,028.59 கோடியாக குறைந்துள்ளது.
நெஸ்லே இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நாராயணன் கருத்துப்படி, அதிக உணவுப் பணவீக்கம் குடும்ப வரவு செலவுத் திட்டத்தை பாதித்துள்ளதால் நடுத்தரப் பிரிவினர் அழுத்தத்தில் உள்ளதாகவும், பழங்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
HUL இன் தலைமை நிர்வாக அதிகாரியான ரோஹித் ஜாவா, இந்த காலகட்டத்தில் சந்தை மந்தமாக இருப்பதாகவும், இதனால் வளர்ச்சி தடுமாறுவதாகவும் சுட்டிக்காட்டினார். சுவாரஸ்யமாக, கிராமப்புற பகுதிகள் தொடர்ந்து நகரங்களை விட முன்னிலை வகித்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். HUL சர்ஃப், ரின், லக்ஸ், பாண்ட்ஸ், லைஃப்பாய், லேக்மே, புரூக் பாண்ட், லிப்டன் மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற பிராண்டுகளைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications