ஏராளமான பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளைத் தொடுக்க அதை லாவகமாக தேர்ந்தெடுத்த நிபுணர் போல பதில் அளித்தார். அவரது பதில்கள் அனைத்தும் அதிரடியா இருந்தது. சரியாக ஒரு மணிநேரம் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டு இந்த பதில் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ஸ்டைலில் ஓகே டன் என்றார்.
அவரது பெயர் சாகர் அதானி. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எக்ஸிகியூட்டிவ் டைரக்டர். ராஜேஷ் அதானியின் மகன். சிஎப்ஓ ராபி சிங் தலைமையில் சில காலம் இருந்த குரூப் சாகர் அதானியிடம் கிரீன் எனர்ஜி நிறுவனப் பொறுப்பை தர குடும்பம் முடிவு செய்தது.

2030க்குள் 50 கிகாவாட் உற்பத்தி திறனை எட்டுவதற்கு நிறுவனம் இலக்கு வைத்திருந்தது. தற்போது புதுப்பிக்கத்தக்க திறன் கிட்டத்தட்ட 11 கிகாவாட்டாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி குறைந்து வருவது பற்றி சாகர் அதானியிடம் கேட்கப்பட்டபோது இந்த ஆண்டு எங்களது திறனை இருமடங்காக ஆக்கவுள்ளோம். கடந்த ஆண்டு 3.5 கிகாவாட் உற்பத்தி செய்தோம். இந்த ஆண்டு இது 6 கிகாவாட்டுக்கு மேல் இருக்கும்.
எங்களது 6 பிளஸ் கிகாவாட் இலக்கு உற்பத்தியை ஏறுமுகத்தில் கொண்டு செல்லும் என்றார். வெளிநாட்டு கடன்கள் பற்றி கேட்கப்பட்டபோது சாகர் அதானி, நிறுவனத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக, நாங்கள் எந்த வெளிநாட்டு கடன்களையும் விட மாட்டோம். எங்களது வெளிநாட்டுக் கடன்கள் அனைத்தும் 100% முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. எங்களின் மிக உயர்ந்த மதிப்பீட்டின் காரணமாக இது எங்கள் பத்திர ஆவணங்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் 60க்கு 40 என்ற விகிதத்தில் இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தையில் கடனை அமைப்போம். திட்டம் செயல்பாடுக்கு வந்தவுடனே அதை 100 சதவீதம் மறு பைனான்ஸ் செய்வோம். 25 ஆண்டுகள் பாண்டுகளாக சர்வதேச பாண்டு சந்தையில் விடுவோம்.
இந்த ஆண்டு உள்நாட்டு பாண்டு மார்க்கெட்டையும் மேம்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை தொடங்குகிறோம. இப்போது உள்ளூர் பாண்டு மார்க்கெட் நிதி நிறுவனங்களால் எளிதாக அணுகும் வகையில் இருக்கிறது. இதனால் உள்ளூர் பாண்டு மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உருவாக்க கூர்மையாகத் திட்டமிட்டு வருகிறோம்.
மூலதனப் பொருட்கள் விலை மாறுதலுக்கு ஏற்ப எங்களது திட்டங்களை செயல்படுத்துகிறோம். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் விலை குறையும் என எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு ஏற்ப நிதி திட்டங்களில் அம்சங்களை வைப்போம் என்றார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாக குரூப்பில் சாகர் அதானி சேர்ந்தார். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications