மும்பையைச் சேர்ந்த அழகு சாதன நிறுவனமான எவர் பியூட்டி நிறுவனர் கவுஷல் ஷா, அலுவலகத்தில் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க அனைத்து ஊழியர்களும் காலை 9:30 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தினார்.
இந்த புதிய ரூல்ஸை-ஐ கடைப்பிடிக்கத் தவறினால், தாமதமாக வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்பு பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரத்திற்கு வந்தனர்.

ஆனால் விதியை கொண்டு வந்த கவுஷல் ஷா-வே 5 முறை தாமதமாக வந்ததற்காக ஒவ்வொரு முறையும் 200 ரூபாய் வீதம் மொத்தம் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
கவுஷல் ஷா தனது அனுபவத்தை X இல் பகிர்ந்து கொண்டதில், நிறுவனத்தின் புதிய விதி மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளை விவரித்தார். "கடந்த வாரம், அலுவலகத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க, அனைவரும் காலை 9:30 மணிக்குள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பான விதியை விதித்தேன் (முன்பு நாங்கள் 10-11 மணிக்கு வருவோம்) தாமதமாக வந்தால், 200 ரூபாயைச் செலுத்த வேண்டும். என்பது தண்டனையாக அறிவித்தோம்" "இதில் நான் 5 வது முறையாகப் பணம் செலுத்துகிறேன்," என்று அவர் தனது ரூ.200 பரிவர்த்தனையின் ஸ்கிரீன்ஷாட்டை ஆதாரமாக பகிர்ந்துகொண்டார்.
ஷாவின் நேர்மையான செயலை டிவிட்டரில் பலரும் பாராட்டினர். "உங்கள் நேர்மை மற்றும் பங்களிப்பைப் பாராட்டுங்கள். எப்பொழுதும் முன்மாதிரியாக இருங்கள்" என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொரு பயனர், "சரியான லீடர்ஷிப்-க்கு உதாரணம்!"
இருப்பினும், சிலர், அபராத தொகை எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பி, நேரடியாக உங்க பாக்கெட்-க்கு போகிறதா என்று கமெண்ட் செய்தனர். மற்றொருவர் இது "நச்சுத்தன்மை நிறைந்த கலாச்சாரம்" என்று குறிப்பிட்டார்.
இந்த கமண்ட்களுக்கு பதில் அளிக்கும் வகையில், கவுஷல் ஷா அபராதம் வசூலிப்பதற்காகத் தனியாக UPI லைட் கணக்கை நிறுவியதாகத் தெளிவுபடுத்தினார்.
ஊழியர்களிடையே சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வரவும், நேரத்தை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது இந்த புதிய விதி, சேகரிக்கப்பட்ட அபராதம் நிறுவனத்தின் குரூப் ஆக்டிவிட்டி-க்கு பயன்படுத்தப்படும். இதேபோல் ஊழியர்களுக்கான உணவு மற்றும் பிற நிகழ்வுகள் போன்ற நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications