ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்த, சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சந்தா கோச்சார் செயல்பட்டு வந்த போது, அவருடைய பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.
மோசடியாக கடன்
அந்த கடன் தொகை சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்தி வந்த நுபுவர் ரெனிவபிள் நிறுவனத்தில் பல தவணைகளாக, அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு வீடியோகான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடன் வசூலாகாத நிலையில் அதனை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தா கோச்சாவின் கணவருக்கு பணம்
இந்த பணம் பல தவணைகளில் மீண்டும் சந்தா கோச்சாரின் கணவருக்கே அளிக்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகிய நிலையில் தான் இந்த கைது நடவடிக்கையானது நடந்துள்ளது. சந்தா கோச்சாரின் கணவர், வீடியோகான் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்பட சில அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
சில ஆண்டுகளாக வழக்கு
இந்த வழக்கு 2019ம் ஆண்டே பதியப்பட்ட நிலையில், அவரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான சொத்துகளையும் அமலாக்க துறையானது முடக்கியது. இந்த நிலையில் தான் சந்தா கோச்சாவும் அவரது கணவருடன் சிபிஐ வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதவியில் இருந்து விலகினார்
ஐசிஐசிஐ வீடியோகான் கடன் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தா கோச்சார், சனிக்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 59 வயதான சந்தா கோச்சார் அக்டோபர் 2018ல் பதவியில் இருந்து விலகினார்.
எவ்வளவு சொத்து?
முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் தலைவரான சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்டினை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இந்த சொத்தின் மூலம் அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் சிபிஐ கண்டு பிடித்துதுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர பொருட்கள்
2011ம் ஆண்டு மும்பையில் சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார் என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான ரியல் எஸ்டேட்டுக்கு சொத்துக்களை வாங்கி போட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இவர்களிடன் மிக உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்கள் பலவும் இருப்பதாகவும், குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளிட்ட சில கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலீடு
பல்வேறு துறைகளில் சாந்தா கோச்சார் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும், அவரது தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications