உலகின் பல முன்னணி கார்ப்பரேட் மற்றும் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியர்களாக இருந்தாலும், சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா ஆகியோருக்கு முன்பாக இந்தியர்களின் சக்தியை அமெரிக்க கார்பேட் ஊழியர்களுக்கு காட்டிய முக்கியமான சிலரில் சாந்தனு நாராயண் ஒருவர்.
பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை சிஇஓ-வாக நியமிக்க தயங்கும் காலம் அது, 2006ல் பெப்சி நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் 2006ல் 5வது சிஇஓவாகவும், முதல் பெண் சிஇஓ-வாகவும் இந்திரா நூயி அவர்களையும் நியமித்தது.

அதற்கு அடுத்த வருடமே 2007 ஆம் ஆண்டு அடோப் நிறுவனம் இந்தியரான சாந்தனு நாராயண் அவர்களை அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக அறிவித்தது. இவருக்கு பின்னால் வந்தவர் தான் முன்னாள் மாஸ்டர்கார்டு சிஇஓ மற்றும் தற்போதைய உலக வங்கி தலைவர் அஜய் பங்கா. யார் இந்த சாந்தனு நாராயண்..?
இந்திய - அமெரிக்கராக முதன் முதலில் ஒரு அமெரிக்க நிறுவனத்தை கையாளும் போது பல விதமான சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அனைத்து தடைகளையும் தாண்டி சாந்தனு நாராயண் டிசம்பர் 2007 முதல் அடோப் இன்க் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2005 ஆம் ஆண்டில், அவர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் COO ஆக பணியமர்த்தப்பட்டார்.
சாந்தனு நாராயண் ஹைதராபாத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது தந்தை ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தை வைத்திருந்தார், அவரது தாயார் ஒரு ஆசிரியராக இருந்தார்.
சாந்தனு நாராயண் ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தார். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து, அத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவில் படிப்பை முடிக்க முடிவு செய்தார்.
நாராயண் 1986 இல் ஓஹியோவின் பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பெர்க்லியின் ஹாஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பெற்றார்.
சாந்தனு நாராயண் தற்போது கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசிக்கிறார். 1980களின் நடுப்பகுதியில், பவுலிங் கிரீன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிக்கும் போது, அவர் தனது வருங்கால மனைவி ரெனியை சந்தித்து திருமணம் செய்துக்கொண்டார்.
1986 ஆம் ஆண்டில், சாந்தனு நாராயண் சிலிக்கான் வேலி நிறுவனமான Measurex Automation Systems இல் பணியாற்றத் தொடங்கினார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல்களின் நுகர்வோருக்கான கணினி கட்டுப்பாட்டு அமைப்புகளை வணிகம் உருவாக்கியது.
1989 முதல் 1995 வரை, அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவர் சிலிக்கான் கிராபிக்ஸ் உடன் பணிபுரிந்தார் மற்றும் பிக்ட்ரா இன்க் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். 1998 ஆம் ஆண்டில், சாந்தனு நாராயண் அடோப்பில் உலகளாவிய தயாரிப்பு மேம்பாட்டின் மூத்த துணைத் தலைவராக சேரும் வாய்ப்பைப் பெற்றார். 2001 முதல் 2005 வரை உலகளாவிய தயாரிப்புகளின் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார் சாந்தனு நாராயண்.
சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தில் 2005 இல் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2007 இல் அடோப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ப்ரூஸ் சிசென் விலகியதும், அவருக்கு பதிலாக சாந்தனு நாராயண் நியமிக்கப்பட்டார்.
சாந்தனு நாராயண் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் உயர் நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் ஆவார். 2022 ஆம் ஆண்டில், அவர் 31 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஊதியம் பெற்றார், அதாவது சுமார் 256 கோடி ரூபாய். இதை தினசரி அளவீட்டில் கணக்குப்போட்டால் ஒரு நாளுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளம்.
2021 ஆம் ஆண்டில், சாந்தனு நாராயணனுக்கு 36.12 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. 2020ல் அவருக்கு 45.8 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. ஹுருன் பட்டியலின்படி, சாந்தனு நாராயணின் சொத்து மதிப்பு 2022ல் 3,800 கோடி ரூபாயாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications