கிஷோர் அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரியும் போதும் அதிகப்படியான சம்பளம், ஆடம்பர வாழ்க்கை, பட்டனை தண்டினால் சேவைகள் என சொகுசாக வாழ்ந்தவர் இன்று பால் விற்கிறார் என்றால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா..?
ஆச்சரியமாக இருக்கும் கிஷோரின் வாழ்கை பயணம் இன்றைய இளம் தொழில்நுட்ப வல்லனர்கள் ஐடி வலையில் இருந்து வெளியேற திட்டமிடுவோருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.
கிஷோர் இந்துகுரி அமெரிக்காவில் தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு, கிராமப்புற இந்தியாவுக்குத் திரும்பி ஒரு பெரிய பால் வணிகத்தை உருவாக்கியுள்ளார். ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான சிட் டெய்ரி ஃபார்ம் இவர் உருவாக்கியது தான்.

கிஷோர் இந்துகுரி ஹைதராபாத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஐஐடி காரக்பூரில் வேதியியலில் பட்டம் பெற்ற பின்னர் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், இதே கல்லூரியில் தனது பிஎச்டி படிப்பையும் முடித்தார்.
படிப்பை முடித்த கையோடு அமெரிக்காவில் அரிசோனாவில் இன்டெல் கார்ப்பரேஷனில் பொறியாளராக சேர்ந்தார். அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் ஒன்றாந Chandler-ல் வீடு வாங்கி வசதியான வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும், பல டெக் ஊழியர்களை போலவே இவரும் தனது வாழ்க்கையில் காணாமல் போன இணைப்பைத் தேடிக்கொண்டிருந்தார். இதனால் இந்தியா திரும்பி ஒரு தொழிலைத் தொடங்க முடிவு செய்தார்.
இந்தியாவுக்கு வந்த ஆர்வத்தில் பல பல தொழில்களை துவங்கி தோல்வியை சந்தித்தார். இதை இடைப்பட்ட காலத்தில் வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு GRE மற்றும் TOEFEL பயிற்சிகளை வழங்கினார். காய்கறிகளை வளர்த்து விற்று வந்தார். இந்த நிறுவனங்களைத் திறப்பதில் அவர் 1 கோடி ரூபாயை இழந்தார்.
ஆனால், 2012ல் 20 மாடுகளை வாங்கி பால் பண்ணை தொடங்கியது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது என்றால் மிகையில்லை. பால் உற்பத்திக்கு ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் செலவான போதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது பாலை லிட்டர் 15 ரூபாக்கு விற்றார்.
இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றிய கைகள் என எவ்விதமான தயக்கமும் இல்லாமல் கிஷோர் இந்துகுரி தனது மாட்டு பண்ணையில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் செய்வார் மாடுகளுக்கு பால் கறப்பது முதல் பால்-ஐ டெலிவரி செய்வது வரையில்.

தண்ணீர், மருந்துகள் மற்றும் ஹார்மோன்கள் இல்லாத பால் என தனது தயாரிப்பை சந்தைப்படுத்தினார் கிஷோர் இந்துகுரி. ஆரம்பக்கட்டத்தில் தனது வாடிக்கையாளரிடம் முதலில் பால்-ஐ பயன்படுத்திவிட்டு பின்னர் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதன் மூலம் வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து வர்த்தகமும் விரிவாக்கம் அடைந்தது.
அடுத்த சில வருடத்திலேயே கிஷோர் இந்துகுரி ஹைதராபாத்தில் மிகப்பெரிய தனியார் பால் சப்ளையர்களில் ஒன்றாக மாறினார். இவரது நிறுவனம் நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து சுத்தமான பாலை கொள்முதல் செய்கிறது.
இவர் 100க்கும் மேற்பட்ட மாடுகள் உடன் பண்ணை நடத்தி வருகிறார் கிஷோர் இந்துகுரி. தற்போது இவரிடம் 120 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பால் மற்றும் இதர பொருட்களை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் விற்பனை செய்து வருகிறார்.
கிஷோர் இந்துகுரி தனது வர்த்தகத்தில் அமெரிக்காவில் பல வருடமாக சேர்த்த முழு சேமிப்பையும் முதலீடு செய்தார். இதோடு சுமார் 1.3 கோடி கடன் வாங்கி ஷாபாத்தில் ஒரு பெரிய பண்ணை கூட வாங்கினார்.

இதன் விளைவாக Sid Dairy Farm நிறுவனம் 2020-21 ஆம் நிதியாண்டில் 44 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2021-22ல் 64.5 கோடி ரூபாயாக உயர்ந்தது. அப்படிப்பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் 17 லட்சம் ரூபாயை கிஷோர் இந்துகுரி-யின் Sid Dairy Farm அவருக்கு ஈட்டித்தருகிறது.


Click it and Unblock the Notifications