இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் இந்தியாவில் தனியார் துறை முதலீடுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், அதிகப்படியான வட்டி விகிதம் சந்தையில் நிலவும் காரணத்தாலும், இதனுடன் சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் இந்திய பொருளாதாரம் Hindu rate of growth என்ற நிலைக்கு நெருங்கி வருவதாக அறிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் குறித்து சமீபத்தில் அதிகப்படியான விமர்சனங்களை முன் வைத்து வரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் கலந்துக்கொண்ட, அவருடனான பேட்டியில் பல முக்கியமான விஷயங்களை ரகுராம் ராஜன் பேசினார்.
இதன் மூலம் ரகுராம் ராஜன் நேரடியாக அரசியலில் இறங்குவாரா என்ற பேச்சுக்கள் அடிப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் Hindu rate of growth என்ற நிலைக்கு நெருங்கி வருவதாக எச்சரித்துள்ளார். சரி Hindu rate of growth என்றால் என்ன..?
இந்து வளர்ச்சி விகிதம்
"இந்து வளர்ச்சி விகிதம்" என்பது 1950களில் இருந்து 1980கள் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 4 சதவீதமாக இருந்ததது. இதை தான் இந்து வளர்ச்சி விகிதம் அல்லது Hindu rate of growth குறிக்கிறது.
ராஜ் கிருஷ்ணா
ராஜ் கிருஷ்ணா என்ற இந்தியப் பொருளாதார நிபுணர், இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியை விரிக்கத்தை குறிக்கும் வகையில் 1978 இல் இந்து வளர்ச்சி விகிதம் என்ற வார்த்தையை உருவாக்கினார்.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் ஒருப்பக்கம் பிற ஆசிய மற்றும் வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து குறிவந்தாலும், பொருளாதார மந்தநிலை அச்சம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது, இதன் வாயிலாகவே சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தேசிய வருமானத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, காலாண்டு பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை குறித்து ரகுராம் ராஜன் தற்போது Hindu rate of growth நிலைக்கு அருகில் இருப்பதாக தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டு ஜிடிபி
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அதாவது அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இது 6.3 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 13.2 சதவீதமாக இருந்தது. டிசம்பர் 2022 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.4 சதவீதமாக குறைந்த இதேவேளையில் முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்தது.
கவலை
இந்திய பொருளாதாரம் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டவர்கள் கடந்தகால GDP அளவை காட்டிலும் கூடுதலான வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள், ஆனால் தொடர்ச்சியான மந்தநிலையை அடைந்து வருவதை கண்டு நான் கவலைப்படுகிறேன்.
கள நிலவரம்
தனியார் துறை முதலீடு செய்ய விரும்பாத நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகள் எங்கு உள்ளது என எனக்குத் தெரியவில்லை என்று ரகுராம் ராஜன் பிடிஐக்கு ஒரு மின்னஞ்சல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் கணிப்பு
2023-24 நிதியாண்டில் இந்திய வளர்ச்சி குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில் முன்பு நாம் 5 சதவீத வளர்ச்சியை எட்டினால் நாம் அதிர்ஷ்டம் என நினைத்த வேளையில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய ஜிடிபி அளவு 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 1 சதவிகிதம் குறைவாகும்.
வேலைவாய்ப்பு
மேலும் அரசு வெளியிடும் வேலைவாய்ப்பு தரவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இல்லை என தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த திட்டங்களின் முதலீடுகள் அடுத்த 4 வருடத்தில் முழுமையாக வந்தாலும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே இந்தியாவில் புதிய முதலீடுகள் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் எனவும் ரகுராம் ராஜன் கணக்கிட்டு உள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications