இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க பொருளாதாரத்திற்கும் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வல்லரசு நாடாக இருந்தாலும், அதன் பொருளாதார அடிப்படையில் தற்போது பெரிய ஓட்டை விழுந்துள்ளதையும் ரகுராம் ராஜனின் எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்காவில் அதிகரித்திருக்கும் கடன் அந்நாட்டு பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும், அடுத்த pandemic வந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ரகுராம் ராஜன் பேசியுள்ளார். இவருடைய பேச்சு அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோம் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ரகுராம் ராஜன், உலகில் எந்த நாடுகள் எல்லாம் அதிகப்படியான கடனை வைத்திருக்கிறதோ, அடுத்த அவசர காலத்தில் (pandemic) பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இந்த உலகம் சர்வதேச பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது, தொற்று நோய் காரணத்தால் நாடு மொத்தமும் பூட்டப்படும் நிலையையும் சந்தித்துள்ளது.
இதேவேளையில் அடுத்த 100 வருட காலத்தில் உலகில் அடிக்கடி pandemic வரும் எனக் கூறப்படும் வேளையில், அதிகப்படியான கடன் சுமை ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிடும் என பேசினார். மேலும் அவர் இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும், ஐஎம்எப் வெளியிட்ட தகவலில் அமெரிக்க அரசின் கடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காட்டுகிறது.
இந்த கடன் சுமையை டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் முழுமையாக மதிப்பீடு செய்து, விரைவில் கடன் சுமையைக் குறைக்கும் பணிகளை டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த உடன் நடக்கும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் கடன் சுமையை குறைக்க அனைத்து நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த லாக்டவுனில் வீட்டு கதவை மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் மூடிவிட்டு நாட்டை திவாலாக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கடன் அளவு தற்போது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது, இது குளோபல் ஜிடிபி-யில் 93 சதவீதம் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இந்த கடன் அளவு அதிகரிக்க மிக முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்காவும், சீனாவும் தான்.
இதேவேளையில் தற்போது உலகளவில் பணவீக்கமும், வட்டி விகிதமும் குறைந்து வரும் வேளையில், கடனை அடைக்க இது சிறந்த ஒரு தருணம் என்றும் ரகுராம் ராஜன் உலக நாடுகளுக்கு வழிகாட்டியுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில்.. அடுத்த லாக்டவுன் வந்தால் அதீத கடன் வைத்திருக்கும் நாடுகள் (மக்கள்) திவால்.


Click it and Unblock the Notifications