முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30-ம் தேதிகளில் பென்ஷன் வழங்கப்படும். ஆனால் பலருக்கு ஏப்ரல் மாத்திற்கான பென்ஷன் இதுவரையில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எந்த அறிவிப்பு இல்லாமல் நிறுத்தம்
ஏப்ரல் மாதத்திறக்கான பென்ஷன் வரவில்லை என்ன கூறும் சில இராணுவ வீரர்கள், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. தேசத்துக்காக உழைத்ததற்கு இது தான் கைமாறா? பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பு
முன்னாள் இராணுவ வீரர்களின் இந்த பென்ஷன் சர்ச்சைக்கு, புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பிற்கு ராணுவம் மாறியுள்ளதே காரணம். இராணுவ வீரர்களுக்கு பென்ஷன் வழங்குவதிலிருந்த பிரச்சனையைக் கலைந்து சரி செய்யவே புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பிற்கு இராணுவம் மாறியுள்ளது. அதில் சில பிழைகள் ஏற்பட்டுள்ளது தான் இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு காரணம். விரைவில் அது சரி செய்யப்படும் என ராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
ஆயுள் சான்றிதழ்
பாதுகாப்புத் துறையின் கணக்குகள் துறையிடம் இது குறித்து விசாரித்த பொது, பல முன்னாள் இராணுவ வீரர்கள் ஏப்ரல் மாதம் பென்ஷன் பெற ஆயுள் சான்றிதழ் சாரப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் பென்ஷன் அறிக்கையில் அதுபற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை கவனித்துச் செய்யாதவர்களுக்கு எல்லாம் பென்ஷன் அனுப்பவில்லை என தெரிவித்தனர்.
முன்னாள் இராணுவ வீரர்கள்
ஆனால் பென்ஷன் வராத முன்னாள் இராணுவ வீரர்கள், நவம்பர் மாதம் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்தோம். அதற்குப் பிறகு எங்களுக்கு அதுகுறித்த தகவல் எதுவும் தேரவிக்கவில்லை. அதுவும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பலருக்கு பென்ஷன் வரவில்லை என கூறுகின்றனர்.
முதல்முறை அல்ல
பிப்ரவரி மாதமும் இதே போன்று பென்ஷனில் அகவிலைப்படி இல்லாமல் வந்தது. சில ஓய்வு பெற்ற பெண் அதிகாரிகள் பென்ஷன் வரவில்லை எனவும் புகார் தெரிவித்து இருந்தனர்.
அரசு
புதிய பென்ஷன் அமைப்பை 160 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளனர். இதனால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications