ஓலா, டிவிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த தமிழர்.. EX-Tesla ஊழியர் தினேஷ்-ன் புதிய எலக்ட்ரிக் பைக்..!!

இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் சந்தை ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது, ஸ்கூட்டர் பிரிவில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் பெரும் பகுதியினர் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை எடுத்து வருகின்றனர். தினேஷ் நிறுவனத்தின் மூலம் இது பைக் பிரிவிலும் மாற உள்ளது.

இதேபோல் எலக்ட்ரிக் வாகனம் என்பது அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் புதிய சந்தை என்பதால் வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளது, இப்பிரிவில்ல இந்திய ஆட்டோமொபைல் துறையில் பழம் தின்னு கொட்டப்போட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவு.

ஓலா, டிவிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த தமிழர்.. EX-Tesla ஊழியர் தினேஷ்-ன் புதிய எலக்ட்ரிக் பைக்..!!

இந்த நிலையில் தான் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கும், தொழில்நுட்பத்திற்கும் பெயர்போன முன்னாள் டெஸ்லா நிறுவன ஊழியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தினேஷ் அர்ஜுன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்களைப் பொருந்த வரையில் பேட்டரி பேக் மற்றும் அதைச் சிறப்பான முறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தான் மிகவும் முக்கியம், இந்த நிலையில் தான் பல நிறுவனங்கள் இத்துறையில் களமிறங்கி வருகிறது.

இதில் ஏற்கனவே அனுபவம் கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான தினேஷ் அர்ஜுன் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தைக்குள் Raptee என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் நுழைந்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினி ஸ்டைலில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார் Raptee தினேஷ்.

ஓலா, டிவிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த தமிழர்.. EX-Tesla ஊழியர் தினேஷ்-ன் புதிய எலக்ட்ரிக் பைக்..!!

இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் சந்தை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் Raptee தினேஷ் இந்த வருட இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளார்.

தினேஷ் அர்ஜுன் 2019 ஆம் ஆண்டுச் சுமார் 8 மாதம் டெஸ்லா நிறுவனத்தில் ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் பிரிவில் பணியாற்றியுள்ளார். இது தவிரப் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளார், இதோடு பிஸ்னஸ் டெவலப்பர், ஃபண்ட்ரைசராகவும் பணியாற்றியுள்ளார். இது மட்டும் அல்லாமல் இவர் 3 ராயல் என்பீல்ட் டீலர்ஷிப் கடைகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் தினேஷ் அர்ஜுன் பள்ளி படிப்பை SBIOA பள்ளியில் முடித்துவிட்டுப் பிரபலமான ஸ்டாக்ஹோல்ம் KTH Royal Institute of Technology கல்லூரியில் ஸ்டூடென்ஸ் எக்ஸ்சேஞ்ச்-ல் பிடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2012-16 வரையில் ப்ரொடெக்ஷன் இன்ஜினியரிங் பிடித்து, இதைத் தொடர்ந்து ப்ரூட் பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரீயல் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தினேஷ் அர்ஜுன் அறிமுகம் செய்யப் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 200சிசி, 135 KMPH டாப் ஸ்பீட், ஹைய் வோல்டேஜ் பேட்டரி என 2.5 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யும் என அறிவித்துள்ளார். Raptee நிறுவனம் தயாரிக்கும் வாகனத்தில் அதிநவீன சேவைகளும், சந்தையில் இதுவரையில் யாரும் கொடுக்காத பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+