விப்ரோவின் முன்னாள் சிஇஓ தியரி டெலபோர்ட் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தியரி டெலபோர்ட் ஊழியர்களுக்காக நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு பிரியா விடை இமெயிலை அனுப்பியுள்ளார்.
அதில் அவர், பொறுப்பை ஸ்ரீனி பல்லியாவிடம் ஒப்படைத்துச் செல்கிறேன். விப்ரோவை அதன் வாடிக்கையாளர்கள் ஒரு மாற்றத்துக்கான பார்ட்னர் எனக் கருதுவதால் விப்ரோ மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் விப்ரோ நிறுவனம் 35 சதவீத வருவாய் உயர்வையும், 25 சதவீதம் அதிக லாபத்தையும் ஈட்டியுள்ளது.
அத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் பன்முக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. என்னிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் பெண்களின் சதவீதம் 5 இலிருந்து 35 சதவீதமாக உயர்ந்தது.
இதை நான் எனக்கு அடுத்தபடியாக வருபவரிடம் விட்டுச் செல்கிறேன். இதை அவர் வெற்றிகரமான மாற்றமாக செய்ய வேண்டும். விப்ரோ
நிறுவனத்தின் உயர் பதவிக்கு ஸ்ரீனி பல்லியா ஒரு சரியான தேர்வு. நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் குழுவில் அவர் மிகவும் வலிமையான தலைவர்.
விப்ரோ வரலாற்றில் கேப்கோ மற்றும் ரைசிங் ஆகியவை மிகப் பெரிய நிறுவன கையகப்படுத்தல் ஆகும். இது தவிர 10 கையகப்படுத்தல் நடந்துள்ளது. இந்தக் காரியம் அவ்வளவு எளிதானதல்ல. விப்ரோ நிறுவனம் ஒரு வலிமையான, மரியாதைக்குரிய, நம்பிக்கையான இடத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பல்வேறு முயற்சிகள், புதிய மார்க்கெட் உத்திகள், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடுகள் ஆகும்.
விப்ரோ தனது ஊழியர்களிடம் செய்த மிக முக்கியமான முதலீடுகள் என்றால் புதிய தொழில்நுட்ப தீர்வுகள், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், கிளவுட், சைபர் செக்யூரிட்டி, டேட்டா, இன்ஜினியரிங் ஆகியவை ஆகும்.
இது தவிர விப்ரோ ஐடி தொழில்நுட்பங்களின் முதல்-வகையான செயலாக்கங்களில் முதலீடு செய்துள்ளது. உங்கள் தொழிலின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பெரிய கனவுகள், லட்சிய இலக்குகளைப் பாதுகாக்கவும். விப்ரோ உங்களுக்காக, உங்களால் மற்றும் உங்களை மனதில் கொண்டு செயல்படுங்கள். உங்கள் வணிகத்துக்கான அளவை உயர்த்துவதைத் தொடரவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications