புதன்கிழமை அன்று மத்திய அரசு பூனம் குப்தாவை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் டெபுடி கவர்னராக நியமித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பொருளாதாரக் கொள்கை மற்றும் சிந்தனை குழுவான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜென்ரலாக பணியாற்றி வருகிறார்.
ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது பூனம் குப்தாவை துணை ஆளுநராக நியமித்துள்ளனர். 2020-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றிய மைக்கேல் டி பத்ராவுக்குப் பிறகு தற்போது பூனம் குப்தா பதவி ஏற்றுள்ளார்.

இதற்கு முன்னர் துணை ஆளுநராக இருந்த பத்ரா, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை, பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி, நிதி செயல்பாடுகள் ஆகியவற்றை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார். பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஐஎம்எப் மற்றும் உலக வங்கியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனியர் பதவிகளில் பணியாற்றிய பிறகு 2021-ஆம் ஆண்டில் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜென்ரலாக சேர்ந்தார்.
டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸிலும், மெரிலாந்து பல்கலைக்கழகத்திலும் தனது பட்டப் படிப்பை முடித்தார். டெல்லியில் உள்ள இந்திய புள்ளி விவர நிறுவனத்தில் பேராசிரியராகவும் இருந்தார்.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பூனம் குப்தா, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றிருக்கிறார். அதேபோல டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
ஜனவரி மாதம் பதவி விலகிய எம்.டி. பத்ராவுக்குப் பதிலாக குப்தா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று துணை ஆளுநர்கள் எம். ராஜேஷ்வர் ராவ், டி. ரபி சங்கர் மற்றும் சுவாமிநாதன் ஆகியோருடன் சேர்ந்து பூனம் குப்தாவும் பணியாற்றவுள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கியில் பூனம் குப்தாவையும் சேர்த்து 4 துணை ஆளுனர்கள் உள்ளனர். இவர்களுடைய பொறுப்பின் கீழ் பொருளாதாரம் இன்னும் சிறப்படையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications