இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றும் பணிகளுக்கு தயாராகி வருகின்றனர், ஒருபக்கம் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இல்லை என கூறப்பட்டாலூம் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக வங்கி கிளைகளை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து வங்கி கிளைகளுக்கும் ஒரு முக்கியமான அறிக்கையை மே 20 ஆம் தேதி அனுப்பியது. இந்த அறிக்கையில் கொடுத்த விதிமுறைகள் 2016 பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒப்பிடுகையில் தலைகீழாக உள்ளது.

2016ல் இந்தியா முழுவதும் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தொகையை மாற்றவும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் பல நாட்கள் வங்கியில் காத்திருந்தனர், இதில் பலர் உயரிழந்த சம்பவமும் நடந்தது. இந்த வேளையிலும் வங்கி கிளையில் படிவம் நிரப்பி, அடையாள அட்டை காட்டிய பின்பு தான் பணத்தை மாற்றப்பட்டது. ஆனால் தற்போது எஸ்பிஐ கொடுத்துள்ள அறிவிப்பு முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.
மே 20 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி கிளைகளுக்கு அனுப்பிய அறிவிப்பில், மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் சேவைக்கு எவ்விதமான படிவமும், எவ்விதமான அடையாள அட்டையும் பெற தேவையில்லை என அறிவித்துள்ளது. இதனால் 2000 ரூபாய் வைத்துள்ள மக்கள் டெபாசிட் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை, எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் தற்போது சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது, இது மொத்த பண புழக்கத்தில் 10.8 சதவீதமாகும். வங்கிகள் இந்த மொத்த தொகையும் டெபாசிட் ஆக பெறுவதற்கு வாய்ப்பு இல்லை, 50000 கோடி முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகை டெபாசிட் ஆக பெறும், மீதமுள்ள தொகை சந்தைக்கு திரும்பும் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் எஸ்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை பெற எவ்விதமான படிவமும், அடைய அட்டையும் தேவையில்லை என கூறிய நிலையில் டெபாசிட் தொகை எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளது. நாட்டின் பணப்புழக்கம் பாதிக்க கூடாது என்பதற்காகவும், வங்கியில் எவ்விதமான ஆப்ரேஷனல் பிரச்சனை வர கூடாது என்பதற்காகவும் எஸ்பிஐ வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
மக்கள் அனைவரும் வங்கிகளில் மே 23 ஆம் தேதி முதல் ஒரு முறை 20000 ரூபாய் வீதம் ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி கொடுத்த விதிமுறையை பிற வங்கிகளும் பின்பற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications