இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு முதல் அனைத்து விதமான நிதியியல் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசும், ஆர்பிஐ-யும் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது. இதன் மூலம் பல கோடி மக்கள் முதல் முறையாக வங்கி கணக்கு திறந்த பெரும் புரட்சி இந்தியாவில் நடந்தது. இதன் அடிப்படையாக வைத்து மத்திய மாநில அரசுகள் பல சிறப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவியை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கிக் கணக்கின் உரிமையாளர்கள், கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை மெயின்டைன் செய்யாமல் இருக்கும் காரணத்தால் அபராத தொகை வசூலிப்பது பெரும் பிரச்சனையாக மக்கள் பார்க்கின்றனர். குறிப்பாக அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சமானிய மக்கள் இந்த பிரச்சனை காரணமாக அதிகப்படியான பணத்தை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த நிதியாண்டு 2023-24ல் மட்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைத் தவிர்த்து மற்ற 11 பொதுத்துறை வங்கிகள், தனது வங்கி வாடிக்கையாளரிடம் இருந்து சுமார் ரூ.2,331 கோடி தொகையை வங்கிக் கணக்கில் மினிமம் பேலென்ஸ் மெயின்டெயின் செய்யாத காரணத்தால் வசூலித்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 25.63% அதிகமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.5,614 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த தகவலை மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் ரூ.8,500 கோடி மினிமம் பேலென்ஸ் மெயின்டெயின் செய்யாத காரணத்தால் வசூலித்துள்ளன.
இதில் அதிகபட்சமாகப் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.633.4 கோடி, வங்கி ஆப் பாரோதா ரூ.386.51 கோடி, இந்தியன் வங்கி ரூ.369.16 கோடியும் 2023-24 ஆம் நிதியாண்டில் வசூலித்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் தனியார் வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தொகையை வசூலித்து வருகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கிகள் கணக்கு உரிமையாளர்களிடமிருந்து அதிக தொகையை வசூலிப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அனைத்து வங்களிலும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத் தொகை கணக்கு (BSBDA) என்ற திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமலேயே சில அடிப்படை வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்டவை அடங்கும்.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது, குறிப்பிட்ட அளவு பணத்தைக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதை 'குறைந்தபட்ச இருப்புத் தொகை’ என கூறப்படுகிறது. இந்தத் தொகையைப் பராமரிக்காவிட்டால், வங்கிகள் அதற்கான அபராத தொகையை வசூலிக்கும்.
இந்தக் கட்டணத்தை விதிப்பதில் பொதுத்துறை வங்கிகள் முன்னணியில் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் இந்தக் கட்டணத்தை 2020 ஆம் நிதியாண்டில் ரத்து செய்துள்ளது. மற்ற வங்கிகள் தொடர்ந்து வசூலித்து வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளைப் போலவே தனியார் வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிமுறையை கடைப்பிடிக்க வைத்து கட்டணம் வசூலிக்கின்றன. சில வங்கிகள் இதற்கான கட்டணத்தை அதிகமாகவே விதிக்கின்றன.
இந்த நிலையில், வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது பாதிப்பாக உள்ளது.
ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பதன் மூலம் வங்கிகளுக்கு இலவசமாகப் பணம் கிடைக்கும். இதனால் வங்கிகள் நல்ல முறையில் செயல்பட முடியும் என்றும் கூறுகின்றன. மேலும் வங்கிகள் அதிகமாகக் கட்டணம் வசூலிப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் வேளையில் அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் இந்த ரிப்போர்ட் வரும் போது எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications