இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது மட்டும் அல்லாமல் மத்திய அரசின் நெட் ஜீரோ இலக்கிற்காகப் பல சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அளிக்கக் கொடுத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் வேகம் காட்டத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் அடுத்த 2 முதல் 5 வருடத்திற்கும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் வர்த்தகம் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக வாய்ப்பை உணர்ந்த எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மாபெரும் பேட்டரி தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல கிகாவாட் சக்தி கொண்டு லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிகாவாட் பேட்டரி தொழிற்சாலை
இத்தொழிற்சாலையை அமைக்க எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கூடிய விரைவில் இந்திய சாலைகளை எலக்ட்ரிக் வாகனங்கள் ஆதிக்கம் செய்யும்.
சுபீர் சக்ரவர்த்தி
இந்த நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்துறையில் லித்தியம் ஐயன் பேட்டரிக்கு அதிகப்படியான தேவை உருவாகும் இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் பிரம்மாண்ட பேட்டரி தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளோம் என இந்நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ சுபீர் சக்ரவர்த்தித் தெரிவித்துள்ளார்.
PLI திட்டம்
மேலும் எக்ஸைட் நிறுவனம் மத்திய அரசின் 5 ஆண்டுக்கான 18,100 கோடி ரூபாய் PLI திட்டத்தில் பங்கு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை அதிகரிக்க அட்வான்ஸ் கெமிஸ்ட்ரி செல் தயாரிப்புக்கான PLI திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
விலை குறைய வாய்ப்பு
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிக முக்கியமானதும் விலை உயர்ந்த பொருளாகவும் பேட்டரி விளங்கும் நிலையில், இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கும் பொருட்டு எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பெரிய அளவில் குறையும். தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பேட்டரி பேக்குகளை வாங்கி வருகிறது. எக்ஸைட் நிறுவனத்தின் கிகாவாட் பேட்டரி தொழிற்சாலை மூலம் இந்த நிலை மாறும்.


Click it and Unblock the Notifications